ஜெ
மகாபாரதத்தின்
மூலத்தில் இருந்து திரௌபதிக்குப் படிப்படியான ஓர் இறக்கம் உள்ளது என்பதை பல ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வியாச மகாபாரதத்தில் அவள் உக்கிர வடிவம் கொண்டவளாகவே
வருகிறாள். அவளுடைய ஆளுமையை மிகச்சிறப்பகாவே வியாசன் சொல்கிறான். அவள் ‘அனலிடைப்பிறந்த கன்னி’ என்பது தெளிவாகவே மகாபாரதத்தில்
உள்ளது
ஆனால் பின்னால்
கிருஷ்ணன் பூதாகரமாக வளர்ந்தான். கிருஷ்ணனின் கதாபாத்திரம் கடவுளாகியது. கிருஷ்ணனை
புகழ்ந்துபேசும் ஏராளமான பகுதிகள் பிற்பாடு சேர்க்கப்பட்டன. மகாபாரதம் என நம்மவர் இப்போது
வாசிப்பதெல்லாம் அதைத்தான். அவ்வாறுகிருஷ்ணன் மேலே தூக்கப்பட்டபோது திரௌபதி கீழிறங்கினாள்.
அவள் கிருஷ்ண பக்தை ஆக மாறினாள். சராணகதித்தத்துவத்தின் அடையாளமாகக்கூட அவளை கிருஷ்ணபக்தி
நூல்கள் சொல்கின்றன
வெண்முரசு
வியாசனின் திரௌபதியை மீட்டு எடுக்கின்றது. கிருஷ்ணனைப்போலவே அவளும் தெய்வீகமான நியோகம்
ஒன்றை தனக்கெனக்க் கொண்டு வந்தவள் என்பது தெரிகிறது. அவளை துர்க்கைவடிவமாகக் காட்டுகிறீர்கள்.
அந்த தனிப்பெரும் சாதனைக்கு வணக்கம்
சுவாமி