Monday, July 11, 2016

அறத்தின் அரசி





ஜெ,

முப்புரி வேலேந்தி வெறிநடனமிட்டான் பூசகன். அவன் தொண்டையிலிருந்து எழுந்தது ஆயிரம் தலைமுறைகண்ட மூதாதையரின் குரல்குருதி எழுக! குருதியின்றமையாது அறமென்றறிக மானுடரே! வெங்குருதி எழுக! நீரென்றும் நெருப்பென்றுமான அமுதமே குருதி! அன்னையே குருதிசூடுக! செங்குருதி சூடுக! இதோ எழுகிறது பலிபீடம். இதோ தன்னை தான் வைத்து காத்திருக்கிறது பலிவிலங்கு. அவிகொள்க! ஐந்து குழல்களில் நிணம் நீவி முடித்து அமர்க! அன்னையே, அடியவர் தலைமேல் கால்வைத்து அமைக! மண் வென்றமைக! அன்னையே, விண்சூடி அமர்க!”

என்ற வரிகள் மெய்சிலிர்க்கவைத்தன. அதிலும் ’குருதி இன்றி அமையாது அறம்’ என்னும் வரி ஒரு பெரிய தீர்க்கதரிசனம் போல ஒலிக்கிறது. மகாபாரதப்போரைவாசிப்பவர்கள் அனைவருக்குமே மனதில் எழும் எண்ணம் இந்தப்போர் எதற்காக என்பதுதான். அது விண் அழிவு என்றுதான் படும். அதற்கு பௌராணிகர்களிடமும் பதில் இல்லை. அவர்களும் அதற்கு மிக எளிமையாக பூமியில் எடை கூடியது என்று ஏதாவது சொல்வார்கள். இத்தனை அழிவையும் ஒரு தட்டில் வைத்தால் மறுதட்டில் நிற்பது எது? அது அறம்தான்

அந்த அறம் என்ன என்பதை வெண்முரசுசொல்லும் என நினைக்கிறேன்

செம்மணி அருணாச்சலம்