ஜெ,
வெண்முரசில்
பன்னிருபடைக்களம் ஓர் உச்சம். அதில் பல பகுதிகள் பேசப்படாமலேயே சென்றுவிட்டன. சுருதகீர்த்தியின்
மன உலகம் ஓர் உதாரனம். அவளுக்கும் அந்த முதிய யானைக்குமான உறவு. அதை குந்தியுடன் ஒப்பிடலாமென்ற்
தோன்றியது.
சுருதகீர்த்தியின்
உலகம் குந்தியை முதன்மை எதிரியாகக்கொண்டு உருவானது. அவள் குந்தியை நினைத்துக்கொண்டே
வாழ்கிறாள். குந்தி அவளுக்கு எதிரி என்பதனால்தான் பாண்டவர்களும் எதிரியாகிறார்கள்.
அந்த வஞ்சம்தான் சிசுபாலனிடமும் இருக்கிறது
அந்த யானைக்கும்
அவளுக்குமான உறவை மட்டும் தனியாக வாசித்தால் அதன் குறியீட்டுத்தளம் அசரடிப்பதாக உள்ளது
சண்முகம்