Saturday, November 22, 2014

பிரயாகை-26-ஒரு கோட்டு ஓவியம்.

ஒரு குழந்தைக்கும் அம்மாவிற்கும் என்ன தொடர்போ அந்த தொடர்புதான் ஒரு மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ளத்தொடர்பு.
விவரம் தெரியாத காலத்திற்கு முன் என்றும், விவரம் தெரிந்த காலத்திற்கு பின் என்று பிரித்துகொண்டு மேற்கொண்ட வரியைப் படித்தால் எப்படி இருக்கும்?

விவரதம் தெரியாத காலத்திற்கு முன் குழந்தை என்று ஒன்று இல்லை, அம்மா என்ற ஒன்றுதான் உள்ளது. விவரம் தெரிய தெரிய அம்மாவேறு தான் வேறு, தன்னில் இருந்து தானும்வேறு என்று புரிந்துக்கொள்கின்றது. மண்ணைக்கூட மனிதன் அப்படித்தான் நினைக்கிறான். தன்னை தான் பிறந்த மண்ணாகத்தான் பார்க்கின்றான். விவரம் தெரிய தெரிய மண்வேறு தான்வேறு, தன்னில் இருந்து தான்வேறு என்பதை அறிந்துக்கொள்கின்றான்.

உடம்பை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அம்மாவை புரிந்துக்கொண்டு விலகுகின்றான். வாழ்வை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு மண்ணை புரிந்துக்கொண்டு விலகுகின்றான்.

//மனிதன் என்பவன் யார்? அதன் இருப்புதான் உண்மையில் என்ன?// என்றஜெவின் கேள்வியில் கிடைக்கும் பதிலின் வழியாக மனித உடலை நாம் பார்க்கும் பார்வையின் வழியாவே, வாழ்வையும் பார்த்து புரிந்துக்கொள்ள முடிகின்றது.

மனித உடல் மாற்றம்போல வாழ்க்கையின் மற்றமும் உள்ளது. கணம்தோறும் கணம்தோறும் மாறும் செயல்களால் ஆன உடம்பை ஒரு பொது வடிவத்திற்குள் கொண்டு வந்து நினைவில் வைத்துக்கொள்ளும் நாம். நமது வாழ்க்கையும் கணம்தோறும் கணம்தோறும் செயல்களின் கூட்டுதான் என்பதை மறந்து, ஒரு பொது வடிவத்தில் அது இருப்பதாக நினைத்து, அது சிதைந்துவிடக்கூடாது என்றும் அது பாதுகாக்கப்படவேண்டும் என்றும் தவிக்கிறோம்.
உடம்புக்கு எத்தனை எத்தனை அம்மையோ?
வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை மண்ணோ?
//நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் உடலின் மாற்றங்களை நம்கற்பனைமூலம் தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஒரு பொதுவானபுறவடிவமே அவனுடைய தோற்றம்அந்தப்புறவடிவத்தின்ஒன்றோடொன்று தொடர்பற்ற பல்லாயிரம் செயல்களை நம் தேவைக்கும்இயல்புக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஓர் அகவடிவமேஅவனுடைய ஆளுமைஇவ்விரண்டுக்கும் நடுவே நாம்உருவாக்கிக்கொள்ளும் சமநிலையே அவன் என்னும் அறிதல்.அவ்வளவுதான்நாம் மானுடரை அறிவதே இல்லைநாமறிவது மானுடரில்நாம் உருவாக்கி எடுக்கும் சித்திரங்களை மட்டுமே.//

”அந்த கணத்தில் வாழ்” என்ற பகவான் புத்தரின் அழியாச்சொற்களை இங்கு ஜெவின் அழியா சொற்களோடு சேர்த்துப்பார்த்தால் மனித உடலும், மனித வாழ்க்கையும் நீர்ப்பாவைப்போல நெளிவதை அறிகின்றோம். காரணம் மண்ணில் படைக்கப்பட்ட அனைத்தும் நெளிந்துக்கொண்டேதான் இருக்கிறது.
// துளியாக இருக்கும் நீர் வழியும்போது வேறொரு வடிவம்கொள்கிறதல்லவாநீரில் வடிவங்களை உருவாக்குவது அதனுள் வாழும்நீர்மைமானுட உடலை உள்ளே வாழும் ஆத்மன் உருவாக்கிக்காட்டுகிறான்” என்றார் ஊஷரர்.//

மானிட உடலை துளி நீரும், அதன் வழியும் வடிவமும் என்பதில் காட்டப்படும் படிமம் எத்தனை கனமானதாக ஆகின்றது. துளி நீர் என்பது ஒன்றுமில்லாத எளிய ஒன்று விரும்புவதுபோல் உருவகம் அமைக்கமுடியாத ஒன்று, ஆனால் அது அமைக்கும் உருவத்தில் நிலைக்கவைக்கும் ஒன்றுவாழ்க்கையும் அவ்வளவே.

மண், நீர், தீ.,காற்று, ஆகாயம் என்னும் ஐந்தால் ஆன இந்த உடம்பு, அதன் மூலப்பொருள்போல கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியதுதான். இந்த உடல்கொண்டு நாம் வாழும் வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியதுதான். மெய்யும் மெய்யென்று, வாழ்வும் மெய்யென்று நம்பி நாளும் உழலும் மனிதனின் மாயைதான் எத்தனை வலியது.

வாழ்க்கைக்கு விடைத்தெரியவில்லை என்கின்றோம். வாழ்க்கைக்கு  விடை ஒன்றுதான். வினாக்கள்தான் ஏராளம். வினாக்களை எண்ணி எண்ணித்தான் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்கின்றோம். அடுத்த வினா என்ன என்பதுதான் தெரியவில்லை.

//எத்தனையோ ஞானிகள் இதை சொல்லிவிட்டார்கள்நாம் இதைஅறிவோம்ஆனால் உணர்வதில்லைஏனென்றால் உணரும்போதுநாமறியும் வாழ்க்கையின் அனைத்து உறுதிப்பாடுகளும்இல்லாமலாகின்றனநம்மைச்சுற்றியிருக்கும் இயற்கை நீர்ப்பாவை போலநெளியத்தொடங்குகிறது//  

கமல்-முடிவிலா முகங்கள் கட்டுரை இந்த பிரயாகை-26க்கு ஒரு முன்னுரை. அதைப்படித்துவிட்டு இங்கு வந்தாலும், இதைப்படித்துவிட்டு அங்கு சென்றாலும் நன்று.

நன்றி ஜெ, வாழ்க்கையையும் உடலையும் ஒரே ஒரு கோட்டில் தீட்டி உள்ளீர்கள்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்