Tuesday, November 18, 2014

வியாசரின் வாரிசுகள்




வணக்கம் ஜெயமோகன் ஐயா ,


முதன் முதலில் கொற்றவையை நான் நூலஹத்தில் இருந்து எடுத்து வந்து வைத்துவிட்டு பின்பு அதை மறந்து விட்டு , என் மனைவி அதனை முழுவதும் படித்துவிட்டு நாளெல்லாம் அதை புகழ்ந்து கொண்டிருந்தபோது , ஒன்றும் புரியவில்லை .. ஏனென்றால் அதை நான் படிக்கவில்லை . 

நான் முதன் முதலில் படித்த உங்கள் படைப்பு 'நதிக்கரையில்' . நான் சிறு வயதிலிருந்தே மகாபாரதத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன் . எனது எட்டாவது வயதில் என் அப்பா எனக்கு வாங்கி தந்த 'வியாசர் விருந்து ' எனக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாபாரதம் ... இரண்டு நாட்களில் படித்து முடித்து விட்டு அதை பற்றியே எண்ணங்கள் ஓடிகொண்டிருந்த காலம் மறக்க முடியாதது .  

அதற்க்கு பிறகு திரு 'சோ ' அவர்களின் மகாபாரதம் பேசுகிறது , திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் , திரு.வாசுதேவன் நாயர் அவர்களின் 'இரண்டாம் இடம்' என்று என் மகாபாரத பசி உண்ண உண்ண அதிகரித்த பசி போல நீண்டுகொண்டே வந்தது ...

முழு மகாபாரத வலை , கும்பகோண பதிப்பக மகாபாரதம் என என் பசிக்கு உணவு கிடைத்து கொண்டே இருந்தது .

உங்களின் வெண்முரசு சில ஞான ? வான்களால் விமர்சிக்கப்படத்தை உங்கள் வலையில் கண்ட பிறகு எனக்கு , என் கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால் இதை சொல்ல நினைத்தேன் ...

மங்காத புகழினால் என் மகாபாரத தாய் தன்னை எப்படியெல்லாம் வெளிப்படுத்தி கொள்கிறாள்.
கடவுள் இல்லையென்று சொன்னவர்காளால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் கூட அவள் தன அழகை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறாள் .....


அவள் வியாசரை தேர்ந்தெடுத்தால் ....அவளே இன்று உங்களையும் தேர்ந்தெடுத்தால் ... 
ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுக்கும் இன்னொரு எழுத்தாளரால் அதன் முன்னுரையைகூட சரியாக எழுத முடியுமா என்பது சந்தேகமே ... தன்னை எழுத யாருக்கு தந்தத்தை ஒத்த வலிமை உண்டு என அவள் விருப்பபடுகிரளோ அவர்களையே அவள் தேர்ந்தெடுக்கிறாள் ...

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ....வியாசரின் வாரிசு ... உங்களின் மூலம் தனது இளமை குன்றா எழிலை மீண்டும் நிரூபிக்க இதோ அவள். 

ஐம்பது வருடங்கள் கழித்து என்ன ஆகும் என்று ஆருடம் பார்ப்போருக்கும் , (பார்க்க இருந்தாலும் இல்லாவிட்டாலும் )..... மத உள்நோக்கம் என்று பேசுவோருக்கும் அவள் அஞ்சபோவதில்லை .... உங்கள் இரு விரல்களின் வழி இறங்கிக்கொண்டிருக்கும் அவள் இறவா புகழுடையவள் ... வெண்முரசு போலவே ....

விவேக் ராஜா