அவர்களால் எதையும் கூச்சலிட்டே சொல்லமுடியும்” என்றான் உச்சிகன்
. “ஏன்?” என்றான் பீமன்.
“ஏனென்றால் அவர்கள் சொல்வதை எவரும் செவிகொடுப்பதில்லை”
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36
- ஜெ
இன்று முழுக்க இந்த வரியை கடந்து செல்லமுடியாது
நேற்றைய அத்தியாயம் முழுக்க ராஜதந்திரப் பேச்சுக்கள். நுட்பமான தர்மங்கள். அதன் குலக்குடி பிரச்சினைகள்
அதற்குக் கீழே எவருமே செவிகொடுக்காத குரக்களின் ஓர் உலகம். அப்படியே தலைகீழாக ஆகும் ஒரு சித்திரம்
என்றைக்குமே இப்படித்தானோ
இதுதான் இன்றைய மகாபாரதம்- இன்று நாம் எழுதி வாசிக்கவேண்டியது
செம்மணி அருணாச்சலம்