Monday, November 10, 2014

வண்ணக்கடல். அலைகள்-ராமராஜன் மாணிக்கவேல்
வண்ணக்கடல்-64

எமன் அன்பில்லாவன்போல இருந்து நன்மை செய்கிறான்காமன் அன்புள்ளவன்போல இருந்து தீமை செய்கிறான் என்கிறார் ஆதிசங்கரர்.

வினை என்ன என்பதல்ல பயன்விளைவு என்ன என்பதுதான் பயன்.

எரிந்துவிட்டது அழிந்துவிட்டது  சாம்பலாகிவிட்டது என்பதுதான் தீயின் வினை முகம்தீயின் முகத்தை விளைவின் திசையில் இருந்து இன்று காட்டும் ஜெயின்வரிகள் வழங்கும் தத்துவஞானம் மின்னலைப்பிடித்து நெஞ்சினில் இழுத்ததுபோல் இருந்தது.

காட்டில் ஒரே ஒரு மரத்தையே வானம் மின்விரலால் தீண்டுகிறதுகாடே வெந்து வீடுபேறடைகிறது” என்றாள்

எரியாமல் இங்கு எதுவும் ஒளியாக முடியாது.ஒளியாவதற்காக வளர்ந்து வளர்ந்து மின்னலை முத்தமிடவேண்டும்.

ஒன்றின் ஒளியில் உலகின் விழிகள் பொருள் அறிகின்றது.காலம் காலமாய் மண் மாண்புர தன்னை எரித்துக்கொண்ட தியாகிகள் எல்லாம் நெருப்புப்பூக்களாய் கண்முன்னே எழுந்து எழுந்து வருகின்றார்கள்.

நன்றி 

வண்ணக்கடல்-65


அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாக
கருணைக்கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய. –கந்தபுரணாம்.

மொத்த கந்தபுராணத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்த ஜெவுக்கு வணக்கம்.

வெற்றியிலிருந்து வெற்றிக்குச் சென்ற சூரபதுமர் அசுரர்குலமன்றி அனைவர் கருவாயில்களையும் மூடும்படிஆணையிட்டார்-இந்த இடத்தில் ஹிட்லர் நினைவுக்கு வருகின்றார்அசுரக்குணம் படைத்தவர்களின் பெயர்தான் மாறிமாறி இருக்கின்றது.அகம் மாறவில்லை.அந்த மாறாத அகம்தான் அசுரத்தன்மையோ?

படைமடத்தால் வீழ்ந்த அசுரர் சிலரேகொடைமடத்தால் வீழ்ந்தவரோ பற்பலர்.” அந்த இடத்தில் தன்சொற்களனைத்தும் முடிந்துவிட்டதை உணர்ந்து அவள் ஒருகணம் திகைத்தாள்இன்றேஏகலைவன்கட்டைவிரலைநிலைக்கின்றது  மனம்

அன்னையர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அறிந்திருக்கும் நிமித்திகர்கள் இல்லை ஆனால் அவர்கள் அறியாத ஒன்றும் பிள்ளைகள் வாழ்வில் நடந்துவிடுவதில்லை. அன்னையர்கள் அறிந்ததை சொல்லத்தெரியாமல் ஏதேதோ சொல்கிறார்களேதவிர எதையும் அறியாதவர்கள் இல்லை.

நன்றி.

வண்ணக்கடல்-66

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
வெண்முரசின் அன்னையர் அனைவரையும் வண்ண மலர்களாக படைத்து உள்ளீர்க்ள என்றால் ஏகலைவன் அன்னை சுவர்ணையை சொக்கத்தங்க ஜோதிமலராக செய்து உள்ளீர்கள்.

பீஷ்மரின் அன்னை கங்காதேவி
சித்ராங்கன் விசித்திரவீரியன் அன்னை சத்தியவதி
திருதராஷ்டிரன் அன்னை அம்பிகை
பாண்டுவின் அன்னை அம்பாலிகை
விதுரரின் அன்னை சிவை
சிகண்டியின் அன்னை அம்பை
துரியோதனனின் அன்னை காந்தாரி
கர்ணன்தருமன்பீமன்அர்ஜுனன் அன்னை குந்தி
நகுலன்.சகாதேவன் அன்னை மாத்ரி
ஏகலைவன் அன்னை சுவர்ணை

அன்னைகளாக அனைவரும் ஒவ்வொரு சித்திரம்ஒவ்வொரு சித்திரமும் அன்னையின் வடிவைத்தாங்கி தனித்தனி வண்ணத்தில் மின்னி ஒளிர்கின்றது வெண்முரசில்.ஆனால் இவை அனைத்திலும் பெருவண்ணம் கொண்டு அனனை சுவர்ணை மின்னுகின்றாள்.
சுவர்ணை என்ற தனது பெயருக்கு ஏற்ற பொன்னாகவே அவள் இருக்கின்றாள்.மற்ற அன்னையரிடம் ஏதோ ஒரு வகையில் தன் அகம் சார்ந்த சுயநலம் இருக்கின்றது சுவர்ணையிடம் அது இல்லை.

கங்காதேவியிடம் தனது ஏழு பிள்ளைகளை கொன்றுவிட்டேனே என்ற மனப்பிளவு உள்ளது.

சத்தியவதியிடம் தனது மகன் குருதி நாடாளவேண்டும் வேட்கை உள்ளது.
அம்பிகையிடம்அம்பாலிகையிடமும் அஸ்தினபுரத்தின் வளர்ச்சிப்பற்றிய நலம் இல்லா சுயநலம் உள்ளது.

அம்பையிடம் பீஷ்மனின் இறப்புக்காக சிகண்டியை பலிக்கொடுக்க தூண்டுதல் உள்ளது.
சிவையின்  தன் மனச்சிதைவு.தன்னைத்தான் தாண்ட முடியாத பலகீனம் உள்ளது.
கண்கனைக் கட்டிக்கொண்டதால் தெளிவற்ற பாதையில் பயணப்படும் மனநிலையில் தவிக்கும் காந்தாரி மகனுக்கு காவல் கைகளை தருவதுபோதுபோல் அகப்பயம் உள்ளது.
கணவனையும்மகனையும் இழந்துகருவுறுமுறையால் அகம் உணரும் குற்றவுணர்வில் தவிக்கும் குந்தியின் உடையது.

உடல் உணர்வில் சறுக்கிய மாத்ரி அதற்காகவே சிதையேறுதல் என்ற தற்காலிக விடுதலை உள்ளதுஇப்படி அன்னையர் அனைவரின்  செயலும் இலக்கும்  தன்நல முனைப்பில் உள்ளது.

ஆனால் சுவர்ணையிடம் தன் அகம்தன் நலம் சார்ந்த சுயநலம் இல்லை.அவளிடம் இருப்பது முழுக்க முழுக்க நாட்டின் நலம் சார்ந்தமகனின் எதிர்காலம் சார்ந்த நலனே உள்ளது அதுதான் அவளின் தாய்மையின் உச்சம்.அந்த அன்னையின் படைப்பை உச்சத்திற்கு கொண்டு செல்லும் நவகண்டம்கூட தன்னல தியாகம்தான்.
துரோணர் வருவதற்கு முன்பே அவள் துரோணரின் காணிக்கையை உள் உணர்வால் அறிகின்றாள்அந்த காணிக்கை கட்டைவிராலாக இருக்கும் என்பதை அவள் அறியவில்லை ஆனால் அது எதுவாக இருந்தாலும் தனது குலத்திற்கும் நாட்டிற்கும் மகனுக்கும் எதிர்காலம் இல்லாமல் செய்யும் என்பதை உணர்கின்றாள்அந்த உள் உணர்வுதான் அவளை தூண்டித்தூண்டி குருகாணிக்கையை அளிக்க சொல்கின்றது.
துரோணர் ஹிரண்யபதத்திற்கு வந்தபோது எல்லோரும் மகிழ்கின்றார்கள் மகிழாத ஒரு உயிர் சுவர்ணை மட்டும்.ஒருவேளை அவளுக்கு துரோணர்தான் எமன் என்று அறிந்து இருந்தாளோ?

அவையினர்பேரொலிஎழுப்பினர்.ஹிரண்யதனுஸ்தன்நெஞ்சில்கைவைத்துவிம்மிஅழுதார்.சுவர்ணைகூரியவிழிகளைதுரோணர்மேல்நாட்டிஅசையாமல்நின்றிருந்தாள்.

சுவர்ணை “மைந்தாஉன்குருநாதருக்குஇந்தநாட்டின்அனைத்துநிலத்திலும்மூன்றில்ஒருபங்கைகுருகாணிக்கையாகக்கொடு” என்றாள்.பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வது சரிதானா?

ஹிரண்யதனுஸ் அவரைபுலித்தோல்விரிக்கப்பட்டஉயர்ந்தபீடத்தில்அமரச்செய்துபாதங்களைநறுநீரால்கழுவச்செய்துஇன்சுவைநீரும்உணவும்அளித்தார்.ஆனால்அரசிசுவர்ணைவந்துமெல்லியகுரலில் “குருநாதருக்குநல்வரவு” என்றுசொல்லிவிட்டுவிலகிநின்றுகொண்டாள்.துரோணர்வந்ததுஏகலவ்யனைவாழ்த்தத்தான்என்றுகுலமூத்தார்மெல்லியகுரலில்மாறிமாறிபேசிக்கொண்டனர்


சுவர்ணையின் முடிவு தெரிந்தபின்பு “ஆனால்” என்ற சொல்தான் எத்தனை பொருள் பொதிந்ததாக கனமாக இந்த இடத்தில் ஆகின்றது.


முதலையும் முடிவையும் ஒரே நேரத்தில் கைப்படுத்தும் வல்லமை அனையருக்குதான் உள்ளது அதை அழகாக வடித்து உள்ளீர்கள்.துரோணரின் மொத்த வாழ்க்கையையும் இந்த சிறுசொல்மணிக்குள் கொண்டுவந்து சுருக்கி வைத்து உள்ளீர்கள்.இதைத்தாண்டி துரோணரின் வாழ்க்கை எத்தனை விரித்தாலும் எங்கு சென்றுவிடமுடியும்.
இங்குநீர்செய்தபழிக்காகஎன்குலத்துமூதன்னையர்அனைவரின்சொற்களையும்கொண்டுநான்தீச்சொல்லிடுகிறேன்.எந்தமைந்தனுக்காகநீர்இதைச்செய்தீரோஅந்தமைந்தனுக்காகபுத்திரசோகத்தில்நீர்உயிர்துறப்பீர்.எந்தமாணவனுக்காகஇப்பழியைஆற்றினீரோஅந்தமாணவனின்வில்திறத்தாலேயேநீர்இறப்பீர்.ஷத்ரியவீரருக்குரியஇறப்பைஅடையும்நல்லூழும்உமக்கிருக்காது.”

குருகாணிக்கையை குருகேட்பதற்கு முன்னமே தந்துவிட சொல்லும் சுவர்ணையை பெண்புத்தியைக்காட்டாதே என்று திட்டும் ஹிரண்யதனுஸ்.நவகண்டம்நவகண்டம்நவகண்டம் என்று கழுத்து அறுத்து இறந்துபோகும் மனைவியை, “சுவர்ணைஎன் தாயே” என்று கூவும் இடத்தில் சுவர்ணை மண்ணில் இருந்து விண்வரை வளர்ந்து நிற்கும் பிம்பம் தோன்றி மின்னியது.நவக்கண்டத்தால் ஒரு செங்குருதி சுடர்அலை அடிக்கும் அன்னைக்கடலாக நெஞ்சில் எழுகின்றாள் அன்னை சுவர்ணை.

நன்றி