Saturday, November 15, 2014

சகுனியின் பகை-நாட்டாரியலில் இருந்து

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஊஷரர் சகுனி குறித்து தெரிவிக்கும் கதையை படித்தேன்.  இந்த கதையை சிறு
வயதில் என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.  சகுனியின் கையில் உள்ள
பகடைக்காய் பசியால் வாடி இறந்த அவன் சகோதரர்களின் எலும்புகள். அதை கொண்டே
ஒட்டு மொத்த கவுரவ வம்சத்தையே அவன் பழி தீர்த்தான். இது கங்குலி
மொழிபெயர்பில் வருவதாக தெரியவில்லை.  இது வேறு நூல்களில் உள்ளதா அல்லது
நீங்களும் செவி வழியாக அறிந்த கதையா?

பி.கு. ஞாநி ம.பு. கருத்துக்களை படித்தேன்.  இந்து இந்திய பாரம்பரியம்
தொடர்பான எதுவும் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதில் வியப்பில்லை.
சமகால அரசியல் நிகழ்வுகள் உடன் போட்டு குழப்பி அடித்து உள்ளனர். என்
போன்ற பல்லாயிரம் வாசகர் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. சோர்வின்றி
தொடர்ந்து எழுதுங்கள்

சிவக்குமார்

சென்னை


அன்புள்ள சிவக்குமார்

அந்தக்கதை மகாபாரதத்தில் உள்ளது அல்ல. மகாபாரதத்தின் கதையோட்டம். குணச்சித்திரங்கள் எதற்கும் அக்கதைக்கும் தொடர்பே இல்லை

அது பிற்காலத்தைய ஜைன பாரதத்தில் உள்ள கதை. அது நாட்டார்கதைகளில் இருந்து மகாபாரதத்திற்குள் வந்ததாக இருக்கலாம். மேலும் அது ஒரு தென்னிந்தியக்கதை.

மகாபாரதம் நாட்டார்மரபுக்குச் சென்றது. நாட்டார் மரபு பின்னர் மகாபாரதத்தை மீண்டும் எழுதியது

ஜெ