Wednesday, November 19, 2014

எரியப்போகிறவள்

அன்புள்ள ஜெ

திரௌபதி அம்மன் எங்கள் குலதெய்வம். ஆனால் ஏன் என்றெல்லாம் தெரியாது. எங்கள் குடும்பங்களில் முன்பெல்லாம் பாஞ்சாலி என்ற பெயர் உண்டு.

திரௌபதி எப்படி வெண்முரசிலே வரப்போகிறாள் என்பதை பிரயாகை தொடங்கியது முதலே பார்த்துக்கொண்டிருந்தேன். துருவன் கதை அவள் வருவதற்கு ஒரு சிறந்த முன்னறிவுப்பு

அதன்பின் பகீரதனின் கதை ஒரு பெரிய முரசு. அவளை கங்கை மாதிரி தவம் செய்து பெறுகிறார்கள் என்பது மாதிரி

அதன்பிறகு ஒவ்வொரு கதையும் திரௌபதியைச் சொல்லிக்கொண்டே இருந்தன. அதாவது துருபதனின் பகை. அது ஊறி ஊறி தீயாகி அந்த தீயிலே அவள் வருகிறாள்

அடுத்து அந்த அதர்வ வேள்வி. நிஜமாகவே அதில் அவள் முகம் தெரிவது ஒரு கிளாசிக் இடம். ஒரு காவியத்தில் அப்படித்தான் வரமுடியும்

அதன்பிறகும்  அவளுக்ககாக் காத்திருந்தேன். ஒரு பெரிய விழாவில் அலங்காரமாகக் காட்டுவீர்கள் என்று நினைத்திருந்தேன். அரண்மனையில் எளிமையாக அவள் வருவது ஆச்சரியமாக இருந்தது

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதுவே அற்புதமாக இருந்தது. நதி போலத்தான் இருக்கிறாள். மெல்ல ஒழுகி வருகிறாள். குளிராக இருக்கிராள்

அவளைப்பற்றிய வர்ணனைகள் எல்லாமே அற்புதம். தெய்வம் அவள். பெண் கிடையாது என்று சொல்லிவிட்டீர்கள்

தபதியின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்ரு தெரியாது இந்த இடத்திலே அவள் அந்தக்கதையை கேட்பது அற்புதமான உத்தி

தபதியும் தீயின் மகள். மக்கலைப்பெற்று குளிர்ந்தாள். அஸ்தினபுரியின் மருமகள். ஆனால் இவள் குளிர்ந்திருக்கிறாள். தீயாக ஆகப்போகிராள் இல்லையா?

கோபால்