Wednesday, November 19, 2014

அனலில் தோன்றியவள்

அன்புள்ள ஜெ

பிராகையின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. கங்கைபோலவே மெல்ல ஆரம்பித்து வேகம் பிடித்திருக்கிறது வெண்முரசு என்று தோன்றுகிறது

பிரயாகையின் வேகத்துக்குக் காரணம் அது ஒரே திசை நோக்கியே செல்கிறது என்பதுதான். துருவனின் கதை முதலே அது திரௌபதியைத்தான் குறிவைக்கிரது. திரௌபதி எத்தனை பெரிய வன்மத்தில் இருந்து உருவானாள் என்பதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறது

துருபதனின் வன்மம் அவளை பெற காரணமாகியது. அவனுடைய பகை என்ற நெருப்பிலேதான் அவள் பிறக்கிறாள். ஆனால் குளிர்ந்து அமைதியான நதியைப்போல் இருக்கிறாள்.

திரௌபதியை விவரிக்கும் இடங்கள் மனசை கொள்ளைகொள்கின்றன. அவள் பிறப்பிலேயே பெரிய பெண்ணாக தீயிலே இருந்து வந்தாள் என்கிறார் வியாசர். நீங்கள் அதையே கவித்துவமகா ஆக்கிவிட்டீர்கள். அவள் இளம்பெண்ணாகவே முதிர்ச்சியுடன் இருக்கிறாள்

அப்படி நிறையப்பெண்களை நானே பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெரிய கூட்டுக்குடும்பத்தின் மூத்த பெண்கள் அபடி இருப்பார்கள்

திரௌபதி அம்மாவையும் அப்பாவையும் புரிதுகொண்டிருக்கும் விதம் அரசாங்கத்தையும் மக்களையும் புரிந்துகொண்டிருக்கும்விதம் எல்லாமே அவள் பிறப்பிலேயே சகக்ரவர்த்தினி என்பதை காட்டுகின்றன

இனி மகாபாரதம் என்பது திரௌபதியின் கதை தானே?

ஜெயராமன்