பிரிய ஜெ,
//“ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது.”//
இவ்வரிகள் இன்றைய அத்தியாயத்தின் சாரமென எண்ணிக்கொண்டேன். திருதராஷ்டிரனின் நிலையை கச்சிதமாக சொல்வதாக இருக்கிறது. திருதராஷ்டிரன்பாரத போரின் முடிவில் பீமனை இறுக்கி தழுவியே கொல்ல முயல்கிறார். ஒருகால் இன்று பீமனை தழுவ வேண்டும் எனும் அவரது ஏக்கம் நிறைவடைந்திருந்தால் அன்று வேறு மாதிரி நடந்திருக்குமோ. உதாசீனபடுத்தபட்ட பேரன்புக்கு இணையான கொலை இயந்திரம் வேறில்லை.
சுனீல் கிருஷ்ணன்