இனிய ஜெயம்,
மீண்டும் பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் உயிர்த்தெழுதல் பகுதியை வாசித்தது போல இருந்தது இன்று கிருஷ்ணன் வரும் பகுதி.
நீலம்
துவங்கி இன்றைய அத்யாயம் வரை கிருஷ்ணன் இவ்வாரானவன் என்று சொல்லும் எதோ
ஒரு ஆளுமையின் வர்ணனை வழியாகவே கிருஷ்ணன் துலங்கி வருகிறான்.
அத்தகு வர்ணிப்பில் சிகரம் என்று, துரியன் பார்வையில் நெருங்கி வரும் கிருஷ்ணன் சித்திரத்தை சொல்வேன்.
நீலம் நாவலில் பசு கன்றினை நக்கும் சித்திரம் ஒன்று ராதா கிருஷ்ண சம்போக நிலை ஒன்றின் வர்ணனனயாக வரும்.
அதற்கும் இன்றைய துரியனின் உபமானத்துக்கும் எத்தனை பண்பு பேதம்? ''ஆயிரம் கன்றுகளை நக்கும் பசு எனக் கண்டேன்.'' என்கிறான் துரியன்.
''அவனால் விழி அசைக்காமல் உத்தரவிட்டு ஆயிரம் பேரைக் கொல்ல முடியும்'' இது அடுத்த வரி.
கிருஷ்ணன்
காமம் குரோதம் மோகம் அனைத்தையம் 'கையாளும்' அதைக் கடந்தவன் என்பது
அவனைக் காணும் ஒவ்வொரு ஆளுமையும் அகத்தால் உணர்ந்தே இருக்கிறார்கள்.
பீமனுடன் துரியன் கொள்ளும் மன விலகல், இன்று தருமனுடன் அவன் கொள்ளும் விலகலுடன் ஒப்பிட்டால் மிக சிறியதே என்று தோன்றுகிறது.
திருதுராஸ்த்ரர்ருக்கு
இணையான, ஏன் அவரைவிட மேலான ஆளுமை துரியன். கணிகன் துரியனுக்கு
அச்தினாபுரியுடனான அரசியல் துண்டிப்பை ''ஒரு சதியாக'' முன்வைக்கிறான்.
அந்தச் சிறுமையை ஒரே பார்வையால் துரியன் உடைத்து ஏறிய, கணிகன் தலை
குனிகிறான்.
ஆனால் தருமன் முற்றிலும் அரசியல்
அறத்தின்பார்ப்பட்டு பின்னர் ''அதை மீறி'' சொன்ன ஒரு சொல். துரியனுக்குள்
உரையும் பாதாள நாகங்களை எழுப்பி விட்டது.
பூ நாகம் , பாதாள நாகங்களாக பல்கிப் பெருகி விஸ்வரூபம் கொள்ளும் சித்திரம் இன்றய அத்யாயம்.
கடலூர் சீனு