அன்புள்ள ஜெ
சகுனியின் குணச்சித்திரம் மாறுவதை நுணுக்கமாக காட்டியிருக்கிறீர்கள். அந்தக்கதை ஜைன மகாபாரதத்தில் உள்ளது என்று விக்கியில் வாசித்தேன். அந்தக்கதையை அவன் கேட்கிறான் அது ஆழத்திலே போய் உட்கார்ந்துவிடுகிறது. கனவு மாதிரி
என் நண்பர் ஒருவர் ஒருமுறை டைபாயிடாக கிடக்கும்போது அவன் அப்பா இனிமேல் செலவு செய்யமுடியாது செத்தால் சாகட்டும் என்று சொன்னாராம். சொன்னாரா இல்லையா என்று தெரியாது. இவன் கேட்டானாம். அது மனதில் பதிந்துவிட்டது. கடைசிவரை அப்பாவுடன் உறவு சரியாகவில்லை
சகுனி இனி பீஷ்மரை அப்பாவாக நினைக்கமாட்டான். அந்த நெகிழ்ச்சிமுழுமையாக்வே இல்லாமலாகிவிட்டது இல்லையா?
நுணுக்கமான திருப்பம் அது. அந்த வெறிகொண்ட ஓநாயின் கடி பெரிய ஒரு நிகழ்ச்சி. அதுபோல ஒரு பயங்கரமான குறியீடை நான் சமீபத்திலே வாசித்ததில்லை
நம்மையும் ஏதாவது வெறிநாய் கடித்துவிடும் என்ற பயம் வந்தது. ஒரு சொல்லால் கடிபட்டாலே போதுமே
சிவராமன்