சார்,
உங்கள் வெண்முரசின் முதல் பாகம் முதற்கனல் இப்போது தான் படித்து முடித்தேன். மகாபாரதத்தை பற்றிய கருத்து வேறுபாடுகள் அதன் நம்பிக்கை தன்மை பலவாறாக இருக்கலாம். அதை நீங்கள் மீண்டும் 10ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக எழுத முடிவு செய்திருப்பது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம்.
எழுதுவதற்க்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சி பாரட்டுக்குரியது.
முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள மனிதர்கள் / நாடுகள் ஊர்கள் காடுகள் / தொகுப்பு பெயர்கள் / கடவுள் பெயர்கள் / நாகத்தின் பெயர்கள் இவைகளை தொகுத்துளேன். ஆனால் முழுமை பெறவில்லை.
இவற்றை நீங்களே தொகுத்து வெளியிட்டால் எதிர் காலத்தில் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இனையத்தில் குறிப்பிட்ட பெயரை தேடும் போது அதனுடன் தொடர்புடைய கதையும் வாசிக்க கிடைக்கும்.
உங்கள் இந்த பெரிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
எம் சேகர்
அன்புள்ள சேகர்
நன்றி
இது பெரிய பணி. இப்போதே செய்ய தொடங்கலாம்தான். அனாஅல் இதிலுள்ள உழைப்பு கொஞ்சம் அஞ்சவைக்கிறது. பின்னாளில் ஏதேனும் பணியாட்களை நிரந்தரமாக அமைத்து செய்து முடிக்கலாமென நினைக்கிறேன்
ஜெ