Thursday, November 13, 2014

கனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்




மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில விஷயங்கள். 

1) ஜாக்ரத், ஸ்வப்னம் போன்ற நிலைகளை குறித்து தாங்கள் எழுதிய கட்டுரையை (http://www.jeyamohan.in/?p=6765) மறுபிரசுரம் செய்யவும். துருபதனின் மனநிலைகளை இந்த கட்டுரையின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடியும். 

2) தாங்கள் த்ரௌபதி பிறப்பு குறித்து எழுதிய "அதர்வம்" சிறுகதை (http://www.jeyamohan.in/?p=13941) வெண்முரசில் கச்சிதமாக இணைந்து விட்டது. 

3) வெண்முரசில் "காமம்" என்ற வார்த்தை "விருப்பம்" என்ற அர்த்தத்தில் உள்ளதா? "உடல் இச்சை" என்ற அர்த்தத்தில் உள்ளதா?

4) மழைப்பாடலில் விதுரர் ராஜ்யம் குறித்து பிரச்சனை வரும்போது லாவகமாக கையாண்டார். பிரயாகையில் அடுத்த தலைமுறைக்கும் லாவகமாக கையாண்டு விட்டார்.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை. 

அன்புள்ள ராஜாராம்

வெண்முரசில் தத்துவ விவாதங்களில் காமம் என்ற சொல் விருப்பம் என்றபொருளில் உள்ளது. பிற இடங்களில் பாலுணர்வு என்ற பொதுவான பொருளில் உள்ளது

ஜெ