Saturday, November 15, 2014

வண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்
வண்ணக்கடல்-69


பீமனுடன் துச்சாதனன் போட்டி இடுகையில் துச்சாதனன் கதாயுதம் உடையும் என்பது எதிர்ப்பார்த்ததுதான் ஆனால் துச்சாதனன் கைக்கோர்ப்பான் என்பது எதிர்ப்பார்க்காதது அதுதான் எத்தனைபெரிய சம்பவத்தின் ஆழமாக உள்ளது.ஆசிரியர் ஜெ போகிற போக்கில் காட்டுவிட்டுப்போகும் பெரும் விளையாடல் இது. துச்சாதனன் கண்களைக்கண்டு அச்சம் அடையும் தருமன் அந்த தருனத்தில் ஆற்றின் வெள்ளசுழியில் மாட்டியதுபோல் கதையின் சுழியில் நெஞ்சம் மாட்டியது.
தருமன் சூதாட்டத்தில் எத்தனை விருப்பம் உடையவன் என்பதும், அந்த ஆட்டம் கதைக்கு எத்தனை உரம் என்பதும் நாளைய அஸ்தினபுரியின் எதிர்கால மகாவீரர்கள் தோன்றும் களமாடல் நிகழ்ச்சிநாளில் தருமன் சூதாட்டம் ஆடுவதும் நாளைய வனத்திற்கான இன்றை விதை விதைத்தல். நாளைய படைவீரர்களும், நாளைய பகடைவீரனும் இன்று காட்சிப்படுத்தப்படுவது அழகு.மீண்டும் ஒரு ஜெவின் வண்ணக்கோலம்.
தன்னைத்தானே இரண்டு  முறைவென்று புன்னகைத்த தருமன்தான் எத்தனை பெரிய எதிர்கால தரிசனம்.


வண்ணக்கடல்-70
கர்ணன்மீது பீமனுக்கு ஏன் வன்மம் என்பது தெரிகின்றது.பாண்டுவும், மாத்ரியும் பூவனம் பார்க்க சென்ற அன்று அவர்களின் வாசம் பார்த்து வழிகண்ட பீமன், குந்தியை, கர்ணனை அறிந்திருக்க முடியும்.அதை மறுக்க இன்று அவனை சூதன் குதிரைமலம் நாறுகின்றது என்று திட்டுவதெல்லாம் நடிப்பு.கசப்பு.


அவனைப்போன்றவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை மூத்தவரேதேவை என்றால் தெய்வங்கள் இறங்கி வரும்என்றான். இதனால் ஏற்படும் உளக்கொதிப்பு.


பெரும் பணிவுடையவனை கண்டால் உலகம் பணிகின்றது.அவன் எதிரியாக இருந்தாலும்.
அர்ஜுனன் துரோணர் பாதம் பணியும்போது கூட்டத்தின் விழிகளில் கண்ணீர்.
கர்ணன் தந்தை அதிரதனை பனியும்போது ,அர்ஜுனன் விழியிலும் கண்ணீர்.
நெஞ்சை அசைக்கும் காட்சியின் இருமுனைகள் முட்டி பூப்பூவாய் பூமழைத்தூவும்நேரம்.

பிறப்பால், கலத்தால், வளர்ப்பால்.கவசத்தால் என்று கர்ணன்மீது இருந்த அனைத்து முரண்களும் சரிசெய்யப்பட்டு கர்ணன் ஒளிகின்றான் இன்று.பீஷ்மர் கிருபர் வாய்மொழிவழியாக கர்ணன் செதுக்கப்பட்டு விடுகின்றான்.


நன்றி். 


முதற்கனல்0-50பதிவாக இருந்தாலும் அதன் காமம் காதல் என்னும் கனலால் பெரும் கனங்கொண்டு தகித்தது.


மழைப்பாடல்-92 பதிவாக இருந்தாலும் பெண்களின் அகவலையால் பின்னப்பட்டதால் முடிவிலியாக இழுத்துப்போனது.அந்த பயணத்தில் எங்காவது உட்கார்ந்து கொள்ளலாமா என்று மனம் கனத்தது.


வண்ணக்கடல்- வானவில்போல, வண்ணமலர்போல, கனவுஓவியம்போல அட..அதற்குள் முடிந்துவிடுமேஎன்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.


விசயன் விடும்பாணம்போல் ஜெ வண்ணக்கடலை தொடங்கியது தெரிந்தது முடிந்துவிட்டதே என்பதுதான் தெரிகின்றது இடையில்தான் எத்தனை வேகம் எத்தனை வண்ணஜாலம்.இது முழுக்க முழுக்க இந்திரதனுசு வானில் கோலமிடும் நாளில் பிறந்த அர்ஜுன் வளர்ச்சி கூறும் நூல் என்பதால் இத்தனை வண்ணமும், வளர்ச்சியும் என்று நினைக்கிறேன்.எல்ல நாளுக்கும் 24 நான்கு மணிநேரம்தான் ஆனால் பிடித்த நாட்கள் ஓடியே போய்விடுகின்றன.பிடிக்காத நாட்கள் நகரமறுக்கின்றன.


நன்றி


வண்ணக்கடல்செம்பதிப்புஅட்டைப்படம்மிகமிகஅருமை. .

கண்ணில்வரைந்தகவிதை
நெஞ்சில்விழுந்தகனிவிதை
வாழ்த்துக்கள்திரு.ஷண்முகவேல்வண்ணக்கடல்-71


பெரும் பகடியின் அலையாய் எழுந்துவந்த வண்ணக்கடல், பெரும் தத்துவத்தின் பனிக்கட்டியாய் இன்று உறைந்து நிர்ப்பது அழகு.

பகடி என்பதும் தத்துவம் என்பதும் வேறு வேறா?இல்லையே. உடைந்து சிதறும் நீர்த்துளியென்ன தத்துவம் தன்னுருவம் இழக்கையில் சிரிக்க  வைக்கிறது. நீராவி குளிர்ந்து நீர்த்துளி ஆவதுபோலும் பகடி குளிர்ந்து நீர்த்துளியென திரளும்போது தத்துவமாகிறது.

தமிழ்நிலத்திலிருந்து அஸ்தினபுரிக்கான புறப்பட்டவன் இளநாகன் என்றுதான் இருந்தேன், வாசகன் அன்ற இளநாகம் யார்?

ஒவ்வொரு வாசகனும் கண்டது அவன் அவனுக்குள் உள்ள அஸ்தினபுரியைத்தான்.காலம் காலமாய் இந்த மண்ணில் எத்தனை எத்தனை அஸ்தினபுரிகள்.எத்தனை எத்தனை வண்ணத்தில் இதோ இன்றும் ஒரு வண்ணக்கடல்.இதில் ஜெ கண்ட அஸ்தினபுரிதான் நான் கண்டதா?நான் கண்டதுதான் நண்பர்கள் கண்டதா?

ஒவ்வொருவரும்அவரவருக்குரியஅஸ்தினபுரியையேசென்றடைகின்றனர்
எங்கோ பிறந்து எதையோ தேடி எங்கெங்கெங்கோ அலைந்து ஏதோ கரத்தில் அகப்பட்டு, தழுவப்பட்டு, உள்ளிழுக்கப்பட்டு, தனத்தில்.முகத்தில், மனத்தில் மறைந்து விதையாகி, மீண்டும் முளைத்து நிற்கின்றான் இளநாகன்.இளநாகன் என்பவன் இளநாகன்தானா?அது ஒரு பெயர் அவ்வளவுதன்.அந்த பெருக்கு அப்பாற்பட்ட மனம் இன்னும் இதோ மண்ணில்.

அன்று இளநாகன் ஆற்றில் விழுந்தது கதையின் ஒரு சம்பவம் என்றுதான் நினைத்தேன் அது எத்தனை பெரிய அழகான படிமம்.ஆறு என்பதும், சேறு என்பதும் ஓடும் வாழ்க்கையும், உறையும் செயல்களும் அல்லவா?

இளநாகன்மூச்சுவாங்கநீந்திகரைசேர்ந்துசேற்றுப்பரப்பைஅடைந்தான்.அங்கேபொன்னிறச்சேற்றில்மெய்யுடல்களுடன்படுத்துப்புரண்டுகொண்டிருந்தஉடல்கள்சேறுஉயிர்கொண்டுஉடல்கொண்டுஎழுந்தவைபோலிருந்தன.அவன்கால்தளர்ந்துவிழுந்தஇடத்தருகேஇருந்தசேற்றுவடிவானபெண்ணுடல்அவனுடன்ஒட்டிக்கொண்டது.சேறுகையாகிஅவனைஅணைத்தது.சேறுதன்தோள்களாலும்தொடைகளாலும்இதழ்களாலும்யோனியாலும்அவனைஅள்ளிக்கொண்டது
மேற்கண்ட எழுத்தை வெறும் எழுத்தென்று கதை என்று நான் சென்றுவிட்டேன் இன்று வண்ணக்கடல் என்ன பகடி செய்து புன்னகைக்கின்றது புன்னைக்கு பின்னால் இருப்பது ஜெவின் முகம்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்