Tuesday, November 11, 2014

ஷண்முகவேல் கடிதம்

ஜெயமோகன்  சார் அவர்களுக்கு வணக்கம்,

 வெண்முசுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களை நேரில் பார்த்து நிறய
பேசலாம் என்று வந்தேன். ஆனால் ஒரு கனவு போல பிரமித்து வந்துவிட்டேன்.

அஸ்தினபுரி வீதிகளும், கோட்டை வாயில்களும், பீஷ்மர், ஆயுதாசாலை, விசித்திரவீரியன் அம்பை, பாண்டு, காஞ்சனம், காந்தாரம்,சதசிருகம், மார்த்திகவதி படித்துறைகள், துவாரகை,ராதை, கண்ணன்,கம்சன்,துரோணர்,துருபதன்.... இன்னும் எல்லாம் மனத்தில் காட்சிகளாய் வந்துகொண்டே இருந்தது. 
          

வெண்முசு தொடங்கிய நாட்களில்  இருந்து கடிதம் எழுதவேண்டும், நேரில் பேச வேண்டும் என்று அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு தயக்கம் காரணமாக தள்ளி போட்டுக்கொண்டே வந்துவிட்டேன்.
மற்ற வாசகர்களின் கடிதங்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.மணிகண்டனிடம் பேசும்போது எல்லாம் இதைப்பற்றிச் சொல்வேன்.

உண்மையை சொன்னால் வாழ்க்கை பற்றிய என் பார்வை வெண்முசுக்கு முன்,வெண்முசுக்கு பின்
என மாறிவிட்டது. 
வெண்முசுக்கு பின் வாழ்க்கை பற்றிய நிறய குழப்பங்களுக்கு எளிய விடைகளும் தெளிவும் கிடைக்கிறது.
நன்றி, நன்றி நன்றி.

வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.

அன்புடன்
ஷண்முகவேல்