Tuesday, February 3, 2015

பகடைக்காய்




அன்புள்ள ஜெ

பாரதத்தில் மிகப்பெரிய சதுரங்கக் காய் என்றால் அது திரௌபதிதான். அவளேதான் ஆடினாள் என்பது இன்னொரு விஷயம். ஆனால் அவள் அடைந்த அவமானமும் கசப்பும் எல்லாம் நம் இதிகாசங்களில் உள்ள வேரெந்த பெண்ணைவிடவும் அதிகமானது என்று நினைக்கிறேன்.

பிரயாகையில் அவளுடைய பிறப்பை அற்புதமாகச் சொல்லிவிட்டீர்கள். அவளுடைய கதாபாத்திரம் ஐந்து முகங்கல் கொண்டு சிறப்பாக வெளிவருகிறது. அரசியென்றே பிறந்தவளுடைய தோரணையும் மிதப்பும் காமமும் குரோதமும் கானமுடிகிறது

ஆனால் அத்தனைக்கும் மேலே அவளைப்போய் சூதில் பணயமாக வைக்கப்போகிறார்கல் என்பதும் கூடவே நிற்கிறது. மனசிலிருந்து அந்த சித்திரத்தினை அகற்றிக்கொள்ளவே முடியவில்லை

பாஞ்சாலியை அந்த எண்ணத்துடன் மட்டுமே வாசிக்கமுடிகிறது. அது பாஞ்சாலி சபதம் வாசித்த நினைவாக இருக்கலாம்.

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன் ; 
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப் 
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், 
மேவி இரண்டுங் கலந்து - குழல் 
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே 
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது 
செய்யும்முன்னே முடியே னென்றுரைத்தாள்


என்ற வரிதான் அவளை வாசிக்கும்போதெல்லாம் வந்தபடியே இருந்தது

ஆர்.சுவாமிநாதன்