Saturday, November 1, 2014

பிரயாகை-9-அந்த கணத்துப்பறவை.





ஒருமரத்தில் அமர்ந்திருக்கும் இணைப்பறவைகளில் ஒன்று அனைத்து கனிகளையும் உண்டு மகிழ்கின்றது மற்றொன்று அமைதியாய் நோக்கி இருக்கிறது. என்று வேதம் காட்டு கதை எங்கோ காட்டில் நடக்கக்கூடியது இல்லை மனிதனில் நடக்கக்கூடியதுதான்.

மரம்போல் இருக்கிறான் என்று மனிதனை சொல்கின்றோம், மரம் கனிகளை உற்பத்தி செய்கிறது. மரம் தின்பதில்லை. பறவைகள் திங்கின்றன.  மரத்தின் கனிகளைதிங்கவந்தப் பறவையாகிய ஆன்மா கனியை தின்றுக்கொண்டு இருக்கும்போதே தனது சுயரூபத்தில் சென்று கனிதிங்காமல் அதனை ரசித்துக்கொண்டும் இருக்கிறது. நடராஜன்போல நடனமும் தானும் வேறு அல்லா என்று இருந்துக்கொண்டு நடனத்திற்கும் அப்பால்தான் உண்டு என்பதுபோல.

காற்றில் பச்சைகுருதி வாசம், கண்களில் கொய்த தலைகளில் பந்தாடல், கைகளில் மின்விசிறியின் சுயற்சி, வாயில் போர்க்குறல், உடலில் அனலின் நடனம் அந்த கணத்தில் தான் இல்லாமல் ஆகி இலக்காக ஆகும் அர்ஜுனன் போர்க்கலத்தின் அனைத்தையும் அந்த கணத்தில் பார்க்கிறான். உணர்ச்சி அறிவு இரண்டாக பிரியும் அந்த கணத்திலும் அதற்கும் அப்பால் அர்ஜுனன் நிற்கின்றான். ஞானியின் மனோபாவம்.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லும் வள்ளுவர் ஏன் சிரிக்க சொல்கின்றார். துன்பம் போய்விடும் என்பதற்காகவா? இல்லை. வலிபோய்விடும், துன்பத்தின் உணர்ச்சி போய்விடும் என்பதற்காக சொல்கின்றார். ஒரு செயலின் உணர்வில் இருந்து வெளியேறும் ஒருவக்கும் அந்த செயல் தரும் பதிப்பு இல்லை என்பதை இதன் மூலம் அறிகின்றோம். அர்ஜுனன்போன்றவர்கள் எவ்வளவு எளிதில் செயலில் உணர்ச்சி வலைக்கு அப்பால் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகின்றது.
பாத்திரம் அறிந்த பிச்சைப்போடு என்பார்கள். இது முழுக்க முழுக்க ஞானமார்க்கத்தில் தொடரவிருக்கும் குருவுக்கும் சீடனுக்கும் உரிய பழமொழி. அர்ஜுனன் இந்த காட்சியின் மூலம் அவன் கர்ணனின் சீடனாகும் பாத்திரம் எவ்வளவு துள்ளியமாக விளங்குகின்றது. சொல்லாயும் தருமன் உணர்ச்சியின் பிடியில் நிற்கின்றான். யுத்தம் செய்யும் அர்ஜுனன் உணர்சியின் வெளியில் நிற்கின்றான்.

//அந்த விரைவிலும் தான் இரண்டாகப்பிரிந்திருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான்ஒருபார்த்தன் போர்புரிந்துகொண்டிருந்தான்இன்னொருவன் அந்தக்களத்தை நுணுக்கமாகநோக்கிக்கொண்டிருந்தான்அவன் அம்புகள் சென்று தொடுவதற்குள்ளேயே இலக்கின் இறப்பைகண்டுவிட்டிருந்தான்கொந்தளிக்கும் உடல்களின் அலையடிக்கும் படைக்கலங்களின் நடுவே அவன்அகம் அசையாமல் நின்றுகொண்டிருந்தது.//

சில மனிதர்கள் மாபெரும் வெற்றிகளை, மாபெரும் போரட்டக்கணங்களில் இருந்து எப்படி பறிக்கின்றார்கள் என்பதை அர்ஜுனன் அகம் காட்டுகின்றது. அந்த கனியை அவர்கள் பறித்தாலும் அவர்கள் அந்த கனியாகிவிடவில்லை, தான் தனியாகவே இருக்கிறார்கள்.

திரு.ஜெ அர்ஜுனன் எவ்வளவு அழகாக போர் புரிகின்றான், அம்பெய்து தலையை வான்வெளியில் பூப்பந்தாக்கி விளையாடுகிறான் (போர் புரிவது அழகா? வாழ்வின் சில முரண்களில் ரசனையில் ஒன்று) என்று காட்டும்போதே, அவன் அகம் பீமன் கதை சுற்றும் அழகையும் கண்டுக்கொள்கின்றது என்று துள்ளியமாக விளக்கிப்போவது  பரவசப்படுத்துகின்றது. அப்போது வந்து விழும் உவமை அற்புதம். //யானை கிளைகளை ஒடிப்பதை தொலைவிலிருந்து நோக்கினால்மலர்கொய்வதுபோலிருக்கும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்//  

பெரும்பாலையில் பூத்திருக்கும் சிறு ஒரு பூவும் ஒரு வனத்தை கொண்டுவந்து தருவதுபோல குருதிநதியில் நீந்தும் வேளையில் அந்த மேற்கண்ட உவமை பெரும் சோலைக்குள் அந்த கணத்தில் நுழைந்துவிட்டதுபோன்ற பிரமிப்பை தருகின்றது.

பெரும் போராட்ட வீரன் வெற்றியின் நாயகன் அர்ஜுன். ஞானிகளின் வழியில் முன் நிற்கும் அகம் கொண்டவன் என்ற இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் மூன்றாவதாக ஒரு அர்ஜுனன் இருக்கிறான் என்பதை திரு.ஜெ காட்டும் இடத்தில் அவருக்கே உரிய ஒரு கூரிய பார்வையை அமது அகத்தின் ஆழுத்தில் செலுத்தி கதவுகளை திறக்கின்றார்.

நாடாளவேண்டும் என்று நினைக்கும் தருமனின் பார்வை எப்படி உள்ளது என்பதை காட்டும் இடம்.
பார்த்தாகௌரவர்கள் எவரேனும் இறந்துவிடக்கூடும்பலருக்கு கடுமையான காயமிருக்கிறது” என்றான்தருமன்.

தன்னையே ஆளநினைக்கும் பார்த்தனின் பார்வை எப்படிப் பட்டது என்பது காட்டும் இடம்.
இறக்கட்டும்… ஆனால் அவர்கள் நம்மை ஒருகணமேனும் இறைஞ்சவேண்டும்” என்றான் அர்ஜுனன்
அர்ஜுனன் ஏன் இப்படி இருக்கிறான். அந்த கணத்தில் அவன் அவனாக மட்டும் இருக்கிறான்.

பழம் தின்னும் பறவைக்கும், பழம் தின்னாத பறவைக்கும் இடையில் இருக்கும் ஒரு பறவை அர்ஜுனன். அது அர்ஜுனாக மட்டும் இருக்கும் பறவை. அது அந்த கணத்தில் இருக்கும் பறவை. அந்த பறவையை காட்டுவது ஜெ எண்ணும் நுண்ணோக்கி.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.