Monday, November 3, 2014

அர்ஜுனனும் பாண்டுவும்




ஜெ

அர்ஜுனன் பெரிய ஸ்திரீலோலன் என்று கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். இது அவனுடைய ஆண்மையின் சின்னமாகவும் கேலிக்குரியதாகவும் கதைகளிலே வரும். ஆனால் வெண்முரசு அதை முற்றிலும் வேறு ஒரு வெளிச்சத்திலே காட்டிவிட்டது.

நாலைந்து நாட்களாக வந்துகொண்டிருக்கும் அத்தியாயங்கள் மேலோட்டமாக சரளமான உரையாடல்களாக உள்ளன. ஆனால் மிகமிக ஆழமானவை. அவை மனித உறவுகளின் மர்மங்களைத் தொட்டுத்தொட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக அவற்றை புரிந்துகொண்டால் மட்டுமே அர்ஜுனன் முதலிய கதாபாத்திரங்களை நாம் அறியமுடியும்

பாண்டவர்களுக்கு இரண்டுவகையான தாழ்வுகள் உள்ளன. அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல, யாதவர்கள். அவர்கள் ஆண்மையற்ற பாண்டுவுக்குப்பிறந்தவர்கள்

ஆகவே அந்த பலவீனத்தை வெல்லவே அவர்கள் அறியாமல் முயல்கிறார்கள். பாண்டு வுக்கு இல்லாத மூன்று திறமைகளை பீமனும் அர்ச்சுனனும் தர்மனும் கொள்கிறார்கள். உடல்வலிமை காமவீரியம் சூழ்ச்சித்திறன். மூன்று வழியாகவும் அதை அவர்கள் வெல்ல முயல்கிறார்கள்.

அதில் வரும் சிக்கல்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையை அமைக்கின்றன என்று காட்டுகிறீர்கள். அர்ஜுனன் பாண்டுவிடமிருந்து மீண்டு பெரியவனாக ஆகணும் என்பதற்காகவே  காமத்தில் போய் விழுகிறான்

ஆண்மையற்றவன் மகனுக்கு ஆயிரம் மனைவிகள் என்பதிலேயே அந்த விடை அமைந்துவிடுகிறது இல்லையா?

சிவம்