Monday, February 2, 2015

பி.ஏ.கிருஷ்ணன் கடிதம்



அன்புள்ள ஜெயமோகன், 

தினமும் எழுதுவது என்பது தவம்.  மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். 

என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பைனயாளராக இருந்தாலும்!

பத்து ஆண்டுகள் உறுதியோடு, உடல் நலத்தோடு இருந்து எடுத்த கருமத்தை நிறைவேற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

மிக்க அன்புடன்,
பி ஏ கிருஷ்ணன்
[4-1-2014]


மதிப்புக்குரிய பிஏகே.
நன்றி
மகாபாரதத்தை நான் என்னலவில் மறுகண்டுபிடிப்பு செய்கிறேன் என்று சொல்லலாம். சமீபத்தில் இமையமலைப்பயணம் செய்தேன். தொன்மையான அதே மலை. நான் பார்த்தமலை என்னுடையது . இது மகாபாரதமல்ல ஒரு நவீன நாவல்
 ஜெ