ஆசிரியருக்கு ,
பிரபாசத்தில் விழும் பாவிகளும் , 
அனிச்சையாகப் பிடிக்கப் போய் கூட விழும் இணை பாவிகளும் ரைவதர் தொடுக்கும் 
போரில் அம்பு பட்டு வீழும் வீரர்களும் , அனிச்சையாக தாங்கப் போய் கூட 
வீழும் வீரர்களும் என  இணையாகச் செல்கிறது.
களத்தில்
 அனிச்சை செயலை ஒருபுறம் தக்க வைத்துக் கொண்டே மறுபுறம் வென்று கொண்டும் 
இருக்க வேண்டும். அடிப்படை விழைவும் அதன் விளைசெயலும் காலம்  நீடிக்கப்பட்ட
 அனிச்சை செயலே.  
ரைவதரின்  மந்திரமலைப் பயணம் ஒரு வகையில் அர்ஜுனனின் பிரபாசப் பயணம் போன்றதே. இரண்டும் அகப் பயணத்தின் புற வெளிப்பாடுகள்.    
பாபநாச பயணம்  ஒரு யோகம்.
கிருஷ்ணன்  
