ஆசிரியருக்கு ,
பகுதி 9 இல் நீலாஞ்சனை அழகு பெருகப் பெருக ஆடினாள் என்றால் அது குறுகக் குறுக இப்பகுதியில் அடங்கினாள். தசை உருக்கமும், கோரம் கொள்ளும் உடலும் பகுதி 9 ஐ எதிர் நிகர் செய்து விட்டது.
ஈச்சையின் இயல்பும், வெல்லம் காய்ச்சும் பதமும் அது திரளும் முறையும் கூட ஒரு ஆன்ம மணம் வீசுகிறது.
திரும்பத் திரும்ப வரும் கோல் விழுந்த முரசு உவமை இது வெண் முரசு வெண் முரசு என அதிர்கிறது.
கிருஷ்ணன்