Tuesday, November 4, 2014

வண்ணக்கடல்- பேருருவம்-ராமராஜன் மாணிக்கவேல்


வண்ணக்கடல்-46 அற்புதம்..அற்புதம்..அற்புதம் என்பதோடு முடித்துக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கின்றேன்.முடியவில்லை.

குருவின் ஒவ்வொரு பாத அடியிலும் விழிந்து பணிந்து தொழுதுச்செல்லும்அர்ஜுனன் மண்ணகம் காணாத அற்புத சீடன் இத்தனை சீக்கிரத்தில் கோபம்கொண்டு இந்த யுத்தம் செய்ததுகொலை அளவு  முடிவு எடுத்தது அவன்பாத்திரத்தை கீழே தள்ளுக்கின்றது” என்று திரு.ஜெவிடம் ஒரு கேள்வியைநேற்று வைத்திருந்தேன்.

கோழிக்குஞ்சை தனது இரையாக காலால் கவ்விச்செல்லும் செம்பருந்துஅதை வானுக்கு தூக்கிச்சென்று அதை தறையில் போட்டுவிட்டது என்றுநினைக்கும் தருணத்தில் செம்பருந்து அம்புபோல் பாய்ந்து இரையைக்கவ்விவான்வெளியில் பாய்ந்து வட்டமிட்டு விழிகளால் “எப்பூடி என்விளையாட்டுஎன்ற புன்னகைப்பது தெரிகிறதுஇன்றைய அர்ஜுனன் படைப்பு.ஆயிரம்நாகொண்ட ஆதிசேஷனாலும் பேசமுடியாத புகழ் என்பது இதுதானா?

சப்தயோகம் பயிலும் இடங்களில் வாசிப்பிலிருந்து நழுவிகங்கைகரைகாட்டில் குருவின் காலடியில் அமரும் தரிசனம்இன்று.கும்மிருட்டில் நெஞ்சுக்குள் இருந்து ஒளி வெள்ளம் பீறிட்டுப்பாயும்அற்புதம்.அதை வார்த்தையில் வடித்துச்சொல்ல தெரியவில்லை

துரோணர்உரக்க “அர்ஜுனாஎன்னசெய்கிறாய்?” என்றார்.அர்ஜுனன்மன்னிக்கவேண்டும்குருநாதரே.உணவுண்டேன்” என்றான்.“அல்ல,நீஇடக்கையால்என்னசெய்தாய்?” அர்ஜுனன்தயங்கிபூச்சிகளைபிடித்துப்போட்டேன்” என்றான்.“பூச்சிகளைஎப்படிக்கண்டாய்?”சற்றுநேரஅமைதிக்குப்பின் “அவற்றின்ஒலியைக்கண்டேன்” என்றான்அர்ஜுனன்.

திரு.ஜெ காட்டும் குருகுல கல்வியும்அந்த வில்வேதத்தின் மூன்றுஅங்கங்களான ஸ்பரிசயோகம்அக்ஷயோகம்சப்த யோகம் படிக்கும்போதுஎல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு எங்காவது போய் உட்கார்ந்துவிடலாம் என்று தோன்றுகின்றதுஎங்கு போனால் என்ன?எவ்வளவுகட்டிப்போட்டாலும் அறுத்துக்கொண்டு போகும் மனமும்எவ்வளவு அடித்துவிரட்டினாலும் போய்விட மறுக்கும் சோம்பலும் இருக்கும்வரை எங்குபோவது.

ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலரிட்டு உனதுதாள்
சேர ஒட்டார் ஐவர்செய்வது என்யான்சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனை சூரனை காருடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப்போதினில் கொன்றவனே!-ஸ்ரீஅருணகிரிநாதசுவாமிகள் அருளிய கந்தர் அலங்காரம்

எவ்வளவு பணம் கொடுத்து எந்த பள்ளியில் படித்தாலும் இந்த மனஒருமையை குருவன்றி வேறுயாரும் கற்றுத்தந்துவிட முடியுமா?துரோணரும் பாண்டவரும்கௌரவரும் அந்த இருள்வெளியும்,கங்கைகரையோர காடும் வர்ணஜாலம் செய்து ஒளிர்கிறது உள்ளத்தில்.

இந்த நினைவு இங்கேயே வந்துவிட்டது.இங்கேயும் ஒரு சிசுபாலனின்தாயா?ஆனால் அப்பா என்னும் உடலுக்குள்.

அப்பாக்கூட அம்மாத்தானோ?அம்மா இடுப்பில்தான் சுமப்பால் என்பதால்தலைக்கமேல் சுமக்க படைகப்பட்டவரோ அப்பா என்னும் அம்மா?

அவனருகேவந்துசற்றுகுனிந்துஉதடுகள்நடுங்கதுரோணர்சொன்னார்நாளைஉன்குலத்துக்கும்உனக்கும்பெரும்பழியைஅவன்அளித்தாலும்உன்பிதாமகர்களையும்அன்னையரையும்உடன்பிறந்தாரையும்மைந்தர்களையும்உன்கண்ணெதிரேஅவன்கொன்றாலும்உன்கைஅவனைகொல்லக்கூடாது.”அர்ஜுனன் “ஆம்குருநாதரே.மூதாதையரும்மும்மூர்த்திகளும்ஆணையிட்டாலும்அவ்வண்ணமே” என்றான்

அம்மா தன்னிலிருந்து ஒன்றை மண்ணில் பிறப்பித்து வைக்கிறாள்,மண்ணில் வந்த ஒன்றை தனுக்குள் பிறப்பித்து வைக்கிறார் அப்பா.

அப்பா ஒரு உடம்பு என்று நினைக்கும் வரை மகன் தன்னை வேறு என்றுநினைக்கிறான்.அப்பா உடம்பல்ல என்று உணரும் அன்று அப்பாவும் மகனும்வேறல்ல என்று மகன் அறிகிறான்.இது குருவுக்கும் பொருந்தும்.

அர்ஜுனன் துரோணரை உடம்பாக நினைத்து அவரை அவர் விழிவழி அகம்அறிய நினைக்கிறான் முடியவில்லை.துரோணர் உடம்பல்ல என்ற அவன்இன்று உணர்ந்திருப்பான்.இது சிறகுகள் முளைக்கும் தருணம்தான்அந்தநேரத்தில் கண்ணீர் வந்து வெறுமையை அறிய செய்வதுதான் பிரபஞ்சஉண்மையோ!

தேடுவது வாள்கொண்ட சொத்தாக இருந்தாலும்வாள்விழியின் முத்தாகஇருந்தாலும் கிடைத்தப்பின்பு வெறுமையும்கண்ணீரும்தான் மிஞ்சுகிறது.

வாழ்வில் வெறுமை உணரும் தருணங்கள்தான் ஞானம் மலரும் தருணமோ?

ஞானம் தருபவரும் ஞானம் பெருபவரும் வாழ்க!

நன்றி