Tuesday, November 4, 2014

அர்ஜுனனின் காமம்




ஜெ

இந்த அத்தியாயத்துடன் அர்ஜுனன் கதாபாத்திரம் முழுமை அடைந்தது என்று நினைத்தேன் [பிரயாகை 15]

அவனுடைய அந்த காமவேட்கையை புரிந்துகொள்ளமுடிகிறது. அவனுக்கும் குந்திக்குமான உறவை நுட்பமாக ஆராய்ந்தாலே போதும். அவன் அந்த தாசியிடம் தேடியதென்ன என்று தெரியும்.

அவன் குந்தியிடம் பேசுமிடத்தில் அவள் கர்ணன் பேரைச்சொல்லி அவனை நுட்பமாக புண்படுத்துவதும்  அவன் அவளை விதுரன் பேரைச்சொல்லி அடிப்பதும் அற்புதமான சைக்காலஜிக்கல் விளையாட்டு

அவனுக்கு அவள்மேல் உள்ள மோகம் அந்த அத்தியயாம் முழுக்க உள்ளது. அவன் மனசில் அழகி என்றால் அம்மாதான். அழகை பார்த்துக்கொணே இருக்கிறான். அதோடு அவளுடைய கம்பீரமும் புத்திசாலித்தனமும் அவனை கவர்கின்றன

அவன் பெண்களிலே தேடுவது அவளைத்தான். கண்டுபிடிக்கவே முடியாமலும் போகும் என்று தோன்றுகிறது. அதைத்தான் கதை சொல்கிறது

அவன் சின்ன வயசு முதல் ஏங்கி கிட்டாமல் போன அம்மாதான் தாசிகளில் தேடுகிறான். அந்த தேடலே அவனை அலைக்கழிக்கிறது

வண்ணக்கடலில் அவன் அம்மாவுடன் படுத்து தூங்க ஆசைப்பட்டு அழும் அத்தியாயம் முக்கியமானது

அர்ஜுனன் பெண்பித்தன் என்று தெரியும். இத்தனை விரிவாக அதை விளக்க முடியும் என்பது ஆச்சரியம்தான்

கஜேந்திரன்