யுவன் அறிவாளி அவர்களே,
மூணு மாசம் முன்னாடி ரூ.1300 (1100+200 தபால் செலவு) கொடுத்து வண்ணக்கடல் செம்பதிப்பு முன்பதிவு செய்தவன் எல்லாம் கூமுட்டை. இப்ப அதே செம்பதிப்ப ரூ.1200 (http://natrinaibooks.com/book/index.php?route=product/product&product_id=153) கொடுத்து வாங்கறவன் எல்லாம் அறிவாளியா ?
நல்லா இருக்குப்பா உன் வியாபாரம் . உன்ன சொல்லி என்ன பிரயோசனம். ஜெமோ வ நம்பி உன்கிட்ட பணம் கொடுத்தவனுக்கு எல்லாம் நல்ல நாமம் போட்டியே !
நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ !!!
கனகசபை
அன்புள்ள கனகசபை அவர்களுக்கு
உங்கள் சினம் புரிகிறது.
வண்ணக்கடல் 320 பிரதிகளுக்கு முன்பணம் அளிக்கப்பட்டது. 400 பிரதியாக அச்சிடுவதே வழக்கம் மீதி 72 பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை கடையில் மட்டுமே கிடைக்கும். வேறெங்கும் கிடைக்காது [ஏனென்றால் அவற்றின் 30 சதவீதம் விற்பனையாளர் கமிஷன் கொடுக்கமுடியாது. நூலின் அடக்கவிலையே 950 ரூபாய்] ஆகவேதான் முன்விலை வைக்கப்பட்டது.
நற்றிணை இணையதளத்தில் நூல் விலைப்பட்டியலில் அது பிழையாக ஏறிவிட்டது. இணையத்தில் அதைப் பெறமுடியாது. 1200க்கு தபாலிலும் வராது
தபாலில் அனுப்புவதென்றால் 1400 ஆகும்.அது ஒரு பிழை, ஊழியர்களால் நிகழ்ந்தது. சரிசெய்துவிட்டார்கள்
ஜெ