Sunday, November 2, 2014

விழா

 
 
 
அன்புள்ள ஜெமோ   ,

வணக்கம் .

இவ்வஞ்சல் உங்களை நல்ல உடல் நலமோடும் மகிழ்ச்சியோடும் கண்டுகளிக்கும் என்று நம்புகிறேன் .

தங்களின் ' வெண்முரசு விழா ' செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்றேன் .

குடும்பத்துடன் விழாவில் கலந்துகொள்ள ஆயத்தமாயிருந்தேன் .

ஆனால் விழாவில் , திரை சாதனையாளர்களான மதிப்பிற்குரிய திரு.கமலஹாசன் மற்றும் மதிப்பிற்குரிய திரு.இளையராஜா கலந்து கொள்ளவிருப்பதால் , பெரும் கூட்டம் வரும் என்று எண்ணுகிறேன் .
மனைவி கங்கா , 2 வயது  மகள் தமிழிசை யுடன் வர இருப்பதால் , சரியான இருப்பிடம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற ஒரு தயக்கம் இருக்கிறது - இருப்பினும் எப்படியாவது விழாவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கியுள்ளது .
இருக்கைகள் முன்பதிவு செய்யும் திட்டம் ஏதும் உள்ளதா , அல்லது வேறேதும் ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ! 
ஓரிரண்டு நாட்கள் முன் இருக்கைகள் முன்பதிவு செய்ய ஏற்பாடு இருந்தாலும் தெரிய படுத்த வேண்டுகிறேன் - நான் வந்து முன்பதிவு செய்துவிடுவேன் .


வாழ்க உங்கள் எழுத்து . 
தாங்கள் நீண்ட ஆயுள் , நிறைந்த செல்வம் , உயர்ந்த புகழ் பெற்று தமிழ்போல் வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன். 

விழாவில் எங்களுடைய கரகொஷங்களுடன் சந்திக்கிறேன் .
​வாசகன் ,
இரா.இராஜகோபாலன் ​
 
 
அன்புள்ள ராஜகோபாலன்
 
விழாவில் மிகப்பெரிய நிர்வாக அமைப்பு இருந்தாலொழிய இருக்கை முன்பதிவு வசதி செய்யமுடியாது. எங்களிடமிருப்பவர்கள் நண்பர்கள்
 
மேலும் இலக்கியக்கூட்டத்திற்கு ஓரளவுதான் ஆட்கள் வருவார்கள். சினிமாவிழாவுக்கான திரள் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் முன்னதாகவே வருவது நல்லது
 
ஜெ