நகுலன் சகாதேவன் கதாப்பாத்தரங்கள் இரண்டும் கிட்டத்தட்ட விடுப்பட்டு போன அளவுக்கு வெண்முரசில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜந்து பாண்டவர்களில் இருவர் என்ற வகையில் அவர்கள் முக்கியமாகிறார்கள். அவர்களுக்கு இதுவரை உதிரி வசனங்களுக்கும் பகடிக்கும் மேல் எந்த ஒரு ஆழமான கதை தருணங்களும் அளிக்கப்படவில்லை.
மஹாபாரதத்தில் நகுல சகதேவனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் சிறு சிறு பாத்திரங்களுக்கும் வெண்முரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தான் சொல்லப்பட்டது. விசித்ரவீரியனுக்கும், துரௌபதியின் அன்னைக்கும், விதுரரின் மனைவிக்கும் கொடுத்த முக்கியத்துவம் இவை இரண்டு பாத்திரங்களுக்கும் கிடைக்கவில்லை.
இதே கேள்வியை கௌரவர்களுக்கும் கேட்கலாம். ஆனால் நூறு பேரையும் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணுவது அபத்தம். ஆனால் பாண்டவர்கள் ஜவராக இருப்பத்தாலயே அனைவரையும் தனிதனியாக எழுதலாம். மூத்த மூவருக்கும் இருக்கும் முக்கியத்துவம் இல்லமாலிருந்தாலும் ஓரளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கலாம்.
அவர்கள் பாண்டவர்கள் என்ற வகையில் மட்டுமல்லாமல் அவர்களும் அவர்களுக்கென கலைகளை கற்கிறார்கள். கணிப்பு கலையும், குதிரை சாஸ்த்திரம் கற்கிறார்கள். அவர்கள் இருவரையும் சொல்லப்படுவதின் மூலம் அந்த இரு கலைகளின் நுணுக்கங்களை சொல்வதற்கு வாய்ப்பு அமைந்திருக்கும்.
அவர்கள் இருவருமே அன்னை இழந்தவர்கள். இரட்டையர். கடைக்குட்டிகள். கதைக்கும் புது பரிமாணம் அளிக்க கூடிய பாத்திரங்கள். அவர்களின் இடத்தில் இருந்து பார்த்தால் குந்தியின் பாசத்தை வெளிக்காட்ட கூடிய அன்னையும் வெளியே தெரிந்திருப்பாள்.
அவர்களுக்கு மூத்த பாண்டவர்களுக்கு வயது வித்தியாசம் சில வருடங்கள் தான் இருக்குமென்று நினைக்கிறேன். நாலைந்து வருடங்கள். இப்போது அவர்கள் இளமை பருவத்தை தாண்டிவிட்டிருப்பார்கள். கல்வி கற்கும் பருவத்தையும் தாண்டி விட்டிருப்பார்கள். இதுவரை வந்த அனைத்து நாவல் தொகுதிகளிலும் அவர்களுக்கு ஒரு அத்தியாயம் கூட அமைய பெறாதது சற்று வியப்பாக தான் இருக்கிறது.
ஹரீஷ்
குழும விவாதங்களில் இருந்து