Thursday, January 14, 2016

போரில்

நான் அதிகம் படிப்பவன் இல்லையென்றாலும், எனக்கு மகாபாரதத்தில் ஆர்வமுண்டு. தொலைக்காட்சி வழிதான் அதிகம் அறிந்து கொண்டேன். ஆனால் இதன் கதைகளை எங்கு பார்த்தாலும் படித்து விடுவேன். அதன்மூலம் எனக்குள் தொகுப்பு உருவாகி உள்ளது.  இத்தனை நாள் எந்த ஒரு பதிவும் எனக்குள் துரியோதனனை ஒர் அரசனாக பதிக்கவே இல்லை.

"அரசருக்கு வழி காட்டுவது என் நல்லூழ்" என சிவதர் சொல்லும் வரியை படித்தபோது ஒரு சுளுக்கு எடுத்தது போலான உணர்வு. ஏன் இப்படி ஒரு விசயம் எனக்குள் பதிவாகவே இல்லை.

துரியன் அஸ்தினாபுரியை ஆண்டது அறிந்தது என்றாலும், அரசராக உணர்த்தியது வெய்யோன் தான்.

இங்கு ஜெ சொன்ன வார்த்தைகள் என்னுள். இலக்கியம் என்பது தெரியாததை சொல்வதல்ல, அறிந்ததை உணர்வெய்பது.

இன்றைய 10.1.16 அத்தியாயம் தண்டபாணி துரைவேல் அவர்களுக்கு ஏற்படுத்திய அதே எண்ணம் எனக்கும் 

கர்ணனின் அம்பில் ஜெயத்ரதனின் இடையடை அவிலும் இடமும்.

நன்றி
பிரகாஷ் நடராஜன்