Friday, January 15, 2016

துரியோதனன் என்னும் நாயகன்





மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு...
.
தினமும் இரவு பனிரெண்டுக்கு காத்திருந்து வெய்யோனை தரிசித்துவிட்டே உறங்கச் செல்கிறேன்.சிலப் பொழுதுகளில் பனிரெண்டுக்கு முன்பே உறக்கத்தை தரிசித்துவிடுவதால் காலையில் கண் விளிப்பது வெயிலோனிலிருந்து துவங்குகிறது.வெயிலோனை இவ்வளவு தீவிரமாக வாசிப்பதற்கு காரணம் ்கர்ணன் மற்றும் துரியோதனின் நட்பாகக் கூட இருக்கலாம்.மேலும் என் நாயகனின் மைந்தன் துரியோதன் மேல் கொண்ட பற்றினால் கூட இருக்கலாம். எது எப்படியோ நீங்கள் வெயிலோனை குறைந்தது ஒரு இருநூறு நாட்களாவது எழுத வேண்டும் என்பதே என் பேராசை.பேராசைகள் நிறைவேறுவதில்லை என்பது எனக்கு தெரியும் இருந்தும் ஓர் ஆசை.
.
ஓர் சந்தேகம் துரியோதனனை நீங்கள் மட்டும்தான் நேர்மறையாக சித்தரிக்கிறீர்களா?துரியோதனனை குறித்து எவரிடம் பேசினாலும் தமிழ் திரைப்பட வில்லனை விட மோசமான பிம்பத்தையே எனக்கு எதிராளிகள் தர முயல்கிறார்கள்.என் வாதம் அங்கு பலன் தருவதில்லை. ஏனென்றால் என் பக்கம் நான் மட்டுமே. எனினும் துரியோதனுக்காக நான் கொடி பிடிப்பதை எப்போதும் நிறுத்தப்போவதில்லை....
.
வெயிலோனுக்காக மீண்டும் என் நன்றிகள்

பிரின்ஸ்

அன்புள்ள பிரின்ஸ்

துரியோதனன் மகாபாரதத்திலும் பெருந்தன்மையும் அன்பும் கொண்ட பெரிய மனிதனாக, நல்ல ஆட்சியாளனாகவே வருகிறான்

ஆகவேதான் அத்தனைபேர் அவனுடன் நின்று போரிட்டனர்

ஆனால் எளிமையான குழந்தைக்கதைகளில் டிவி பாரதத்தில் அப்படிக் காட்டமுடியாது. வில்லனாகவே காட்டமுடியும். அதுதான் எளிய மனங்களுக்குப்புரியும்

ஜெ