ஜெ
காந்தாரி இருக்கும் அரண்மனையை ஒரு கோயில்போலவே நீங்கள் உருவகித்திருப்பதை கண்டேன்.
உள்ளே கருவறையில் அன்னைத்தெய்வம். அதைச்சுற்றி மைந்தர்கள். வெளியே துவாரபாலகிகள். கூடம்
முழுக்க பரிவாரங்கள்.
ஒரு கோயிலுக்குப்போவதைப்போலவே கர்ணன் பல படிகளாகச் சென்று அன்னையைத் தரிசனம்
செய்கிறான். அந்த உணர்வை அவன் அடைவதை அந்த இடத்தில் மொழி தாளமாக மாறி அற்புதமாகக் காட்டுகிறது
செல்வராஜ்