அன்புள்ள ஜெ,
வெய்யோன் 22 ல் 'ஜயத்ரதன் பின்னால் ஓட முயல்வதற்குள் கர்ணனின் வாத்துமுக அம்பு அவன் முன்நெற்றி முடியை வழித்துக்கொண்டு பின்னால் சென்றது.'
தட்டையான முகப்பு உள்ள அம்பைக் குறிப்பிடுகிறீர்கள். இதை 'வாத்தலகு' என்று
சொன்னால் இன்னும் சரியாக இருக்கும் அல்லவா? அல்லது 'வாத்து முக' அம்பு
என்பது வேறா?
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
அன்புள்ள மகராஜன் அருணாச்சலம்
உண்மைதான்.
ஆனால் முகம் என்றால் முகப்பு என்றே பொதுப்பொருள்
வாத்துமுகம் என்றுதான் இருக்கிறது. வாத்தின் முகமல்ல, அம்பின் முகம்
ஜெ