ஜெ
இன்றைய அத்தியாயத்தில் ஜெயத்ரதனின் ஆழ்மனம் வெளிப்படும் இடம் அற்புதமானது. ஒரு வில்லனாக அறிமுகமாகி பொய்யான அகங்காரம் கொண்டவனாக விரிந்து அதற்குள் அன்பைத்தேடும் ஒரு இளைஞன் இருப்பதைக் காட்டிவிட்டது கதை
ஒருசில அத்தியாயங்களுக்குள் மிக இயல்பாக இப்படி ஒரு கதாபாத்திரம் வளர்ச்சியடைவதை ஆச்சரியமாகவே பார்க்கிறேன். மகாபாரதத்தில் ஜெயத்ரதன் மிகச்சின்ன கதாபாத்திரம். அவன் போரில்தான் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமகா வருகிறான்
அவன் ஏன் கௌரவர்களுடன் நின்று உயிர்துறந்தான் என்பதைக் காணமுடிகிறது
சாமிநாதன்