Thursday, January 28, 2016

பின் செல்லும் உத்தி





அன்புள்ள ஜெ

ஜெயத்ரதன் ஒரு கதாபாத்திரமாக அறிமுகமாகி வளர்வது தலைகீழாக நடக்கிறது. அவன் ஒரு ஆளுமையாக நமக்குத்தெரிகிறான். ஏன் அப்படி இருக்கிறான் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னால்சென்று விளக்கப்படுகிறது. அவன் கர்ணனை எதிர்த்தது, கர்ணனை நுணுக்கமாக அவமதித்தது, துச்சளை சொல்வது, அவன் கௌரவர்களிடம் நடந்துகொள்வது,திருதராஷ்டிரரிடம் நடந்துகொள்வது எல்லா விஷயங்களும் ஒன்றாகின்றன.
உதாரணமாக, கடைசியில் அவன் சொல்லும் கதையில்தான் அவன் ஏன் துரியோதனன் தன் தம்பியைக் கட்டிப்பிடித்து தலையைத் தடவியபோது அழுதான் என்பதே தெரியவருகிறது

மகேஷ்