Thursday, January 21, 2016

ஆளுமைகள்

 
 
வணக்கம் திரு ஜெயமோகன்
 
Note: some text are unintentionaly displayed in large font due to some format issue.
பதில் கடிதத்திற்க்கு நன்றி :) , உங்கள் பணிசுமையை புரிந்துகொள்கிறேன், எனது முந்தைய கேள்விகளுக்கு விரிவான உங்கள் பதிலை பொறுமையுடன் ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கிறேன்.
வெண்முரசு தொடர்பாக ஒரு தெளிவின்மை.

சிறுவயதிலிருந்தே அரசனாகவே தன்னை உணர்ந்து வளர்ந்த துரியோதணன், போரன்றி பிற அரசு செயல்பாடுகள் அலுப்பூட்டுவதாக தெரிவிப்பதும், வனமேகி தியானம்/தவம் செய்து நிகர்நிலை பெற்றுமீண்ட துரியோதனன் நிலையழிக்கும் மதுவில் அவ்வளவு விழைவு கொண்டிருப்பதும் பொருத்தமற்றதாக தோன்றுகிறது

போரில் மட்டுமே ஆர்வமென்றிருந்தால் தர்மனையே ஆளசொல்லிவிட்டு, கதாயுதமேந்தி காவலுக்கு நின்றிருக்களாமே?அரசனுக்கான பணிகளை அறியாமலா, அதில் ஆர்வமில்லாமலா அரசனாக ஆசைபட்டான்?!

மேலும் மேலும் தன் படைகளையும், தரப்பையும் வலுப்படுத்திகொள்ள வேண்டியவன் அதர்க்கான அவசியத்தை உணராமலா பொருப்பற்று மதுவை அவ்வளவு விழைகிறான்?!

கலிங்கத்திற்க்கு பெண்கவர செல்லும்போது "இந்த நேரத்தில் மது சரியல்ல" என்று துரியோதணனுக்கு அறிவுருத்துபவனா அதே அறிபுரையை சிவதரிடமிருந்து பெருமாறு நடந்துகொள்கிறான்? பிறர் அடையும் அவமதிப்பையும், துயரையும் நுணுக்கமாக உணர்ந்துகொள்ளும் உளவிரிவு கொண்டவனா தானடையும் சிறு அவமதிப்பிற்க்கும், துயருக்கும் மதுவை விழைகிறான்? தானடையும் அவமதிப்பு தனது சிறுமையால் அல்ல தன்னை அவமதிப்பவரின் மூடதனத்தால்/சிறுமையால் என்றுணர்ந்து விலகிபார்க்காதெரியாதவனா கர்ணன்?! நிகரற்ற வில்வீரன் எவ்வளவு மன ஒருங்கு கொண்டவனாய் இருப்பான், நிலையின்மை தவிற்க்க மதுவருந்துபவனாகவா இருப்பான்?!

பொறுப்பை தவிர்த்து களிப்பிற்காக துரியோதணனும், அர்பர்களின் அவமதிபினால் துயருற்று கர்ணனும் மதுவருந்துவது அவர்களின் மைய ஆளுமைக்கு பொருத்தமற்றதாக தோன்றுகிறது.
பா-சதீஷ்

அன்புள்ள சதீஷ்

ஒன்று, மதுவருந்துதன் அரசர்களுக்கு ஒழுக்கமீறலாக அன்று கருதப்படவில்லை

இரண்டு கதாபாத்திரங்களை நாம் சில ஒற்றைவரையறையை கொண்டு மதிப்பிடலாகாது. அவர்களின் மனநிகழ்வுகள் வழியாக அவர்களை விரிவாக்கித் தொகுத்துக்கொள்வதே சரியான வாசிப்பாகும்

எளியமையான கதைவடிவங்கள் கதாபாத்திரங்களை ஒற்றையடையாலம் கொண்டவையாக காட்டும். இலக்கியங்கள் ஆளுமையின் உட்சிக்கல்களை நோக்கியே செல்லும்

ஜெ