அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,தன்னவர்களின் மனம்
புண்படாமல் அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி அவர்களின் அன்பை
பெற தான்னால் முடிந்தவரை தன்னை குறுக்கிகொண்டு செல்கிறான் கர்ணன்,ஆனால்
கடைசிவரை அவன் நினைப்பது நடைபெறாத ஒன்று."தன்னை எரித்து உலகுக்கு ஓளி
கொடுக்கும் சூரியனை போல ,தன்னை துன்பபடுத்திக்கொண்டு பிறருக்கு இன்பத்தை
தருகிறான் சூரிய புத்திரன்"
இதுவரை கர்ணனின் கவசக்குண்டலங்களை
மிக சிலரே கண்டிருந்தனர்,ஆனால் கலிங்க நாட்டில் ஒரு முழு ஊரே அதை காண்கிறது
.ஒடிசாவில் தானே சௌர மதம்(கோனார்க் போன்று) பெருமதமாய் நிலைத்திருந்தது என
நினைக்கிறேன்,அதனால் தானோ என்னவோ தங்கள் தெய்வத்தின் மகனை கண்டவுடன்
கண்டுபிடித்துவிட்டனரோ?.நன்றி
இப்படிக்கு,
குணசேகரன்.
அன்புள்ள குணசேகரன்
நன்றி
இது வண்ணக்கடலில் வந்துவிட்டது. மீண்டும் இங்கே வரும்போது ஒருவாசகராவது அடையாளம் கண்டு எழுதவேண்டுமென நினைத்தேன். உங்கள் கடிதம் உவகை அளித்தது
ராஜபுரம் கொனார்க் அருகே இருந்தது
ஜெ