பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
“இவன் தாய்
கருவுற்றிருக்கையில் பறவைக்கரசர்
ஆலயத்தில் அன்றாடம் வழிபட்டாள் என்பது
சூதர் மொழி.”
இந்த
வரிகளை படித்தவுடன் எனது ஊர்(ஆழ்வார்திருநகரி)பக்க்ஷி ராஜர் ஆலயம் தான் நினைவுக்கு
வந்தது.இதில் முன்பெல்லாம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் சிறிய மரத்தொட்டில் வாங்கி
தொங்கவிட்டு பிரார்த்தனை செய்வார்கள்.ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சுவாதி
நட்சத்திரம் அன்று முடியுமாறு பத்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடக்கிறது.தங்களின் தனித்தமிழில் “பறவைக்கரசர்
ஆலயத்தில்” என்று படிக்க மேலும் பரவசம் ஏற்படுகிறது. “நாசிகன்” என்ற பெயர்
உ.பி.முதல்வர் அகிலேஷ்யையும்,அவர் அப்பா முலாயம் சிங்கையும் நினைவு படுத்த
தவறவில்லை!
அன்புடன்,
அ.சேஷகிரி.