பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.ஜயத்ரதனின் கதையை பலர் கூற கேட்டு இருக்கிறேன்,நமது 'வெண்முரசில்' அது வடிவம் கொள்ளும் அழகை படித்து வருகிறேன்.இன்று அதன் உச்சகட்டமாக சிவனின் சிரிப்புடன் கூடிய வரம்?(சாபம்)- "ஆம், கங்கை பெருகிச் சென்றாலும் நாய் நாக்குழியாலேயே அள்ள முடியும். அவ்வண்ணமே ஆகுக!’'.எத்தனை பொருள் பொதிந்த வார்த்தை!.