ஜெ சார்
கர்ணனுக்கும் நூறு கௌரவ மருமகள்களுக்குமான அந்தக்கொஞ்சல் அழகாக வந்திருக்கிறது. பிள்ளைகளின் கூத்துக்குப்பிற்பாடு அந்தக்கொஞ்சல் வரும்போது இன்னமும்கூட அழகாக இருக்கிறது. முக்கியமான இடம் அது.
அதன் உட்குறிப்பையும் புரிந்துகொண்டேன். கதை நேராக பாஞ்சாலி துகிலுரியும் இடம் நோக்கித்தான்போகிறது. அங்கே என்ன நடக்கிறது என்று அறிந்தபின்னர் இந்தப்பெண்கள் எல்லாரும் கர்ணனை எப்படிப்பார்ப்பார்கள்? அவன் எங்கிருந்து எங்கே விழப்போகிறான்!
நுட்பமான அந்த இடம். அவர்கள் அவன் உயரத்தைப்பற்றியும் மணிக்குண்டலங்களையும் கவசங்களைப்பற்றியும்தான் பேசிக்கொள்கிறார்கள். அவனை அவர்கள் சூரியதேவன் என நினைக்கிறார்கள்
சூரியதேவனின் தேர் சேற்றில் புதையப்போகிறது
ஜெயக்குமார்