ஜெ
’வெய்யோனொளி தன்மேனியின்
விரிசோதியில் மறைய’ என்பது ஒரு கம்பராமாயண உவமை. அதை வெண்முரசில் எடுத்தாண்டிருக்கிறீர்கள்.
சூதன் அதை எப்படிப்பாட முடியும்? அது பத்தாம்நூற்றாண்டுக்காவியம் இல்லையா?
ராமச்சந்திரன்
அன்புள்ள ராமச்சந்திரன்,
அப்படிஎன்றால்
சூதன் தமிழில் மட்டும் பேசமுடியுமா என்ன?
வெண்முரசு கம்பனுக்கு
பின்னால் வரும் நூல், இதுவே விளக்கம்
சடையப்ப வள்ளலின்
முன்னோர் எப்படி ராமனுக்கு முடிசூட்டினர்?
பொதுவாக காவிய
இலக்கணங்களில் ஒன்று எடுத்தாள்கை. வெண்முரசில் அப்படி பல வரிகள் உள்ளன. அது ஒரு அழியாத்தொடர்பை
உருவாக்குகிறது. ஒரு நினைவை கிளத்துவதன் வழியாக
ஜெ