அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு பரிபூரணமான உடல் நலனையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வேண்டி கோள்கின்றேன்.
தினமும்
வெண்முரசு படிக்கும் பொழுது, இந்த இமாலய முயற்சி தங்களுக்கு தடையல்லாமல்
கைகூட வேண்டும் என்று நினைத்து கொள்வேன். பல ஆயிரம் வருடங்களாக 'ஜெயா'வை
காத்தருளூம் தெய்வம், இதனை நல்ல முறையில் செய்யும் என்று நம்புகிறேன்.
இன்றைய
என்னை போன்ற இளைய தலைமுறையினர் இந்து மதம் பற்றிய அடிப்படை கேள்விக்கூட
விடை தெரியாமல் திரிந்து மத நம்பிக்கைகளை வேருக்கும் நேரத்தில் தங்களின்
தர்க்க சார்ந்த இந்து மதத்தை பற்றிய பதில்கள், வெண்முரசு கதைகள் என்னை
இந்து மதத்தின் அடிப்படைகளை புரிய செய்து அதன்மீது அன்பு கொள்செய்கின்றது.
அதற்கு மிக்க நன்றி.
முதல் வியாசர் எழுதிய 'ஜெயா'
நூல் 600 பக்கம் கொண்ட நூல் என்று நீங்கள் எங்கே சொன்னதாக ஒரு நினைவு.
அந்த புத்தகம் எங்கு கிடைக்கும். படிக்க ஆவலாக உள்ளது.
நன்றி.
இப்படிக்கு
சோ. சௌத்ரி
அன்புள்ள சௌத்ரி அவர்களுக்கு
புனாவின் பண்டார்க்கர் ஆய்வுநிறுவனம் மகாபாரதத்தில் வியாரரின் வரிகள் மட்டுமே அடங்கிய ஜய என்னும் நூலை வெளியிட்டிருக்கிறது. ஆய்வுப்பதிப்பு. பரவலாகக்கிடைக்காது
2400 ஸ்லோகங்கள் மட்டுமே கொண்டது அது
ஜெ