Thursday, January 14, 2016

குதிரைக்காரன்



ஜெ

சூதன்மகன் என்று சுப்ரியை சொல்லும்போது ஒரு முள் போல தைத்தது. ஆனால் அதே அத்தியாயத்தில்தான் அவன் சூதன்மகன் என்பதன் அரிய சித்தரிப்பும் இருந்தது. அந்த காலொடிந்த குதிரையை கர்ணன் அத்தனை அபாயத்திலும் அணைத்துக்கொண்டதைச் சொல்கிறேன்.

சூதன் மகன் தான் அவன் . சூதனாக இருந்தமையால்தான் குதிரையின் தனிமையையும் துக்கத்தையும் பாசத்தையும் அவன்புரிந்துகொள்கிறான். அந்த தன்மை அவனுடைய வீழ்ச்சி அல்ல வலிமை

ஜெயராமன்