ஜெ
வெண்முரசின் போர்க்களக்காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. போரில் எப்போதுமே அதுவரை இருந்த நுணுக்கமான குணச்சித்திரங்களும் நம்பமகான லாஜிக்கும் இல்லாமலாகி ஒரு குழந்தைக்குரிய குதூகலம் வந்துவிடுகிறது. ஆகவேதான் அதில் மனிதர்கள் அம்புபட்டு விழுவதெல்லாம் மரணமாகத் தோற்றமளிக்காமல் ஒரு ஆட்டமாகவே தெரியத்தொடங்குகின்றன என நினைக்கிறேன்
கர்ணனும் அர்ஜுனனும் எல்லாம் போர்த்தெய்வங்கள். அவ்வாறு அவர்கள் தனியாகச் சென்று ஜெயிக்கமுடியுமா என்று கேட்டால் முடிந்ததனால்தான் அவர்கள் அவ்வாறு ஆனார்கள் என்பதுதான் பதில் அது மகாபாரதத்திலேயே உள்ளது என்பதனாலேயே அது அவ்வாறுதான்
அதிலும் கர்ணனின் அசையாத உறுதியும் கண் தொடுமுன்பே கை சென்று தொடும் நுட்பமும் அபாரம்
ஜெயராமன்