ஜெமோ
வெண்முரசின் அழகான இடங்களில் ஒன்று காந்தாரி கர்ணனைச் சந்திப்பது. இது இதற்குமுன்னால் வந்ததே இல்லை. அவனுக்கு குந்தி அன்னையாக கிடைக்கவில்லை. கிடைத்த அன்னையாகிய ராதையை அவன் இழந்துவிட்டான்.
ஆனால் பேரன்னையாக காந்தாரி இருக்கிறாள். மூத்தமகனாக அவள் அவனை நடத்துவதும் கடிந்துகொள்வதும் மிக மிக அழகாக இருக்கின்றன. இப்படி ஒரு அன்னை அவனுக்கிருக்கையில் குந்தி வந்து அம்மாவிடம் வா என்றால் அவன் எப்படி செல்வான் என்று நினைத்துக்கொண்டேன்
ஒரு காந்தார அரசி நான் பிள்ளைச்சுமையால் சாகவேண்டுமென்பது விதி என்னும் இடத்தில் வருந்தினேன். அவர்களுக்கு என்னென்ன வரவிருக்கிறது என அவர்கள் அறியவில்லை
வாசகனுக்குத்தெரியும் என்பதை வைத்து ஒவ்வொரு வரியிலும் விளையாடிக்கொண்டு செல்கிறீர்கள் ஜெ
அருண்