ஜெ
ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம். வெண்முரசில் கர்ணனுக்கும் கௌரவர்களுக்கும் உள்ள உறவைச்சொல்லவேண்டியதேவை இருக்கிறது. ஆகவே அந்த பகுதிகள் விரிவாக இருக்கவும் வேண்டும். ஆனால் இங்கே இருப்பது ஒரு பெரிய கொண்டாட்டம். குழந்தைகள் பெருகி கூத்தாடுகின்றன. மக்கள் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். பெண்கள் களியாட்டமனநிலையில் இருக்கிறார்கள். குடியும் உண்டாட்டுமாக அஸ்தினபுரி கொழிக்கிறது. அன்னை மக்களை அணைத்தபடி இருக்கிராள்
அதன்பின் ஒரு புள்ளியில் உறைத்தது. இதெல்லாமே ஒரு இனிமையான கனவுமாதிரி கலைந்துபோகும் இல்லையா? எல்லாம் நீர்க்குமிழிகள். இன்னும் ஒரு சிலநாட்கள்தான் பாஞ்சால்லி அவமதிப்பாள். அவளை திரும்ப துரியோதனன் அவமதிப்பான். வஞ்சினம் உரைக்கப்படும். அதோடு எல்லா நிம்மதியும் இல்லாமலாகிவிடும். நேராகப்போர்தான். ரத்தம்தான்
அந்தக் கடைசிவெளிச்சம் இது. நினைக்க நினைக்க துயரம்தான் மிஞ்சுகிறது
மனோகர்