ஜெ
பெரீந்தையே என்னும் அந்த அழைப்பு மனசிலேயே நிற்கின்றது. அவர்கள் அப்படி அழைக்க என்ன காரணம்? அவர்கள் அப்போதுதான் கர்ணனைப்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அவர்களின் தந்தையர் கர்ணனைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்கள். அவர்களே அவனைப்பற்றி நிறையப்பேசியிருக்கிறார்கள் என்பதுதானே? அதுதான் கர்ணனின் இடம் அங்கே .அந்த நுட்பத்தை உணர்ந்தபோது பரவசமாக இருந்தது
இவர்கள்தான் அஸ்தினபுரியின் கைவிடுபடை என்ற சொல்லாட்சியை வாசித்ததும் குபீரென்று சிரித்துவிட்டேன். ஒவ்வொருவரியிலும் கொண்டாட்டம் நிறைந்தது இந்த அத்தியாயம். ஒரு மண்டை வந்து இளையவனைத் தின்னலாமா என்று கேட்கும் இடம் உச்சம்
மனோகரன்