ஜெ
வெய்யோன் இதுவரை வந்த நாவல்களிலேயே உருக்கமானது. குறிப்பாக கர்ணன் அவமதிக்கப்படும் காட்சிகள் ஒவ்வொன்றும் இன்றைய வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுபவை போல உள்ளன
பல இடங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் கொஞ்சம் மென்மையான புரிந்துகொள்ளும் ஆணைக்கண்டால் பெண்கள் காட்டும் அடமும் வீம்பும் ஆச்சரியம் அளிப்பது அதை அற்புதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்
அதேபோல கர்ணனும் துரியோதனனும் கொள்ளும் நட்பும் அதை பானுமதி புரிந்துகொண்டிருக்கும் ஆழமும்
வெண்முரசு வரிசையில் உறவுகளின் நுட்பத்தை அழகாகச் சொன்ன அரிய\ நாவல் இது
பானுமதியிடம் துரியோதனன் குடிப்பதற்கு அனுமதிகேட்பதும் பம்முவதும் அவருடைய அழகான குணச்சித்திரம். அவரைப்போன்றவர்கள் அப்படித்தான் இருக்கமுடியும்
அதே துரியோதனன் தான் போர்க்களத்தில் கொலைவெறியுடன் இருக்கிறார். குணச்சித்திரங்கள் மிகத்துல்லியமான வார்ப்புகளாக உள்ளன.
மனோகரன்