ஜெ
சுஜாதனின் வஞ்சினத்தில்
அவனுடைய அறநெறி இருக்கிறது என்றாலும் அதன் கூடவே அன்றைய போர்முறையும் இருக்கிறது. அதாவது
ஒரு அரசகுலத்தான் தப்புச் செய்தால் அவனுடைய குலத்தையும் நாட்டையும் அழிக்கவேண்டும்
என்ற வெறி. மகபாரதகாலம் முதல் இன்றைக்குவரை அந்த வெறி எவ்வளவோ அழிவுகளுக்கு பின்னாடியும்
இருந்துகொண்டேதான் இருக்கிறது இல்லையா?
சுஜாதன் அறைகூவல்
விடுக்கும்போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் கூடவே அது கௌரவர்கள் எப்படிப்பட்ட
மூர்க்கமான சக்தி என்பதையும் காட்டுகிறது
செல்வராஜ்