அன்புள்ள ஜெ
சுஜாதன் என்னும் கதாபாத்திரம் உயிர்கொள்வதைக் கண்டு திகைப்பு. வண்ணக்கடலில்தான் அறிமுகமாகிறான் என நினைக்கிறேன். கானாடலுக்குச் செல்லும்போது பீமனிடம் வந்து தூக்குங்கள் மூத்தவரே என்று சொல்லி கொஞ்சிக்கொண்டு நின்றிருக்கும் ஒருவயதுச் சிறுவன். அந்தப்பையன் இப்போது வளர்ந்து இப்படி ஒரு பெரியவனாக நின்றிருப்பதைக் கண்டு உள்ளம் விம்மிதம் கொள்கிறது. அவனுக்கு இருபது வயது இருக்கும். அல்லது அதற்கு மேல். ஆனால் சின்னப்பையனாகவே இருக்கிறான். மானசீகமாக வளரவே இல்லை. ஆனால் அந்தத்தருணத்தில் சட்டென்று வளர்ந்து பெரியவனாக ஆகிவிட்டான். அதுதான் அவனும் ஒரு கௌரவனாக ஆகும் தருணம்
ஜெயச்சந்திரன்