Saturday, January 16, 2016

கர்ணனின் துயரம்


இதுவரை வந்தவைகளை பார்த்தபடி வந்தேன்.

உண்மையில் கர்ணன் என்பதுதான் இவனுக்கு இருந்த பெரும் பெயரா? ஏன் இவன் இவ்விதம் பேசப்பட்டான்?

1. திறமை தனக்கும் உண்டு அதை வளர்த்தி கொள்ள தீராத வெறியும் உண்டு என நீருபித்து விட்டான். உலகு சுற்றி வலி தாங்கி வாங்கி கொண்ட வில் வித்தைகள் மற்றும் அஸ்திரங்கள் எனபடுபவை.

2. குணவான். தந்தபடி வாழ்பவன் என்றுமே பேசப்படுவான். அரசு பேச்சு பேசுபவனை காட்டிலும், வித்தை கொண்டு அரசு வாழ்வு வாழ்பவனை காட்டிலும் கொடுப்பவனும் அறம் வழி நிற்பவனும் தான் மேல் புகழ் கொள்வர் போல

3. பெருந்தாரம் என சொல்லப்படும் விரிவு. தோள் போல உயரம் போல மனமும் விரிவு. அதனால் உள் ஊரும் கருணை ...
இவன் கூட அமர்ந்து தந்தையை கேலி செய்த கொண்டு இருந்த ராதை சத்தென்று கீழே விழுவதை போல இவன் அரண்மனை கொண்டு வாழ செல்கையில் காலில் இருக்கும் தளை என இறுக்க ஆரம்பித்தது ஒரு அயர்வு. அதிலும் விருஷாளியை மணம் முடிக்க கட்டாய படுத்தும்போது இவன் "ஒலிஇன்றி முறிந்து" போன உறவின் அயர்வு தாண்டி உடனடியாக அவன் அன்னை மேல் விளையாட்டு பேச்சு பேசுகையில் ... இந்த விரிவு தான் இவன். எத்தனை முறை அவசரபட்டாலும் துரியன் மேல் எரியாமல் மீட்டு எடுத்து போரில் செல்வது இதே விரிவு தான்.

4. மனைவி மட்டும் அன்றி எதிரி மேலும் இந்த கருணை நிற்காமல் பரவ துடிப்பது தான் இவனின் பெருந்தன்மை அல்லது தயாளம்


கைகளை பின் கட்டி கொண்டு அவன் நடந்து செல்லும் சித்திரம் கண்ணுக்குள். வாய் விட்டு சிரிப்பது கௌரவ்கர்களுக்கு வருவது போல பீமனுக்கு மட்டும் தான் வரும் போல... பாஞ்சால போரின் போது வெண் பனி புகை கிழித்து குதிரை ஏறி செல்லும் போதும் துரியன் சிவதர் உடன் தனித்து சென்று பெண் கவர்ந்து அரண்மனையின் வெண் திரை விலக்கி வெளியே வரும் போதும் மீண்டும் மீண்டும் நீங்கள் சூரியன் முகில் வெளித்து வருவது போல தோன்ற செய்தீர்கள் என தோன்றியது. 

அவமானங்களை பெற்று கொண்டே செல்ல வேண்டும் என ஆசிர்வாதமாக பெற்று பிறந்தவன். தன்னின் கொடை பற்றி கவலை படாமல் சென்றபடி உள்ளவன். போரில் மட்டும் அவன் முழுது குவிந்து செயலாற்றி பின் தனித்து துவண்டு சிரித்து செல்பவன். வரும் சலிப்புகளை பார்த்தல், பீஷ்மன் போல காடு ஏகி விடுவான் என தோன்றுகிறது. 

ஒரு வேலை இப்படி தான்  இவனை சமைக்க வேண்டும் என நீங்கள் முடிவு எடுத்து விட்டது போல படுகிறது. ஒரு வறட்சி போன்ற துயரம் களிம்பு என படிந்து அதுவே வாழ்வு ஆகி ..... செத்து வீழும் போது அப்படா என்று தோன்றி இருக்கும் அவனுக்கு 

அன்புடன் 
லிங்கராஜ்